உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

ஆகும். ஆதலால், அத்தகைய பொருளீட்டல் வழியையும், ஈட்டல் பொருளையும் அப்பொழுதே விட்டொழிப்பாயாக என்கிறார்.

“நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்”

(113)

வெஃகாமை என்பதோர் அதிகாரம். பிறர் பொருளை எவ்வெவ் வகைகளில் எல்லாம் கவர்ந்து கொள்ளலாம் என்று விரும்புவதே வெஃகுதல் ஆகும். அதில்,

"வேண்டற்க வெஃகியாம் ஆக்கம்”

என்கிறார்.

நேரிய நெஞ்சத்தை யுடையவர், எப்படியேனும் பொருளைத் தேடிக் கொள்ளலாம் என்று எண்ணிப் பழியுண்டாகும் செயலைச் செய்யமாட்டார்; பின்னே, பலர் முன்னே நாணி நிற்கும் நிலைமை உண்டாகுமே என்று அஞ்சிச் செயல்படுவார்" என்கிறார்:

“படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்”

(172)

தரங்குறைந்த பொருள் உருவாக்கத்தில் ஈடுபடுதல், தரமுள்ள பொருளுக்குப் போலிப் பொருளாக்கம் புரிதல், தரமுள்ள பொருளுடன் தரமிலாப் பொருளைக் கலந்துவிடுதல் என்பன வெல்லாம் என்ன? “படுபயன் வெஃகிப்பழிப்படுவ செய்தல் தானே! ஆதலால், அத்தன்மையில்லாரை ‘அறவர்’ என்றும் ‘அறிவர்' என்றும் பாராட்டினார். அது,

66

"அறனறிந்து வெஃகா அறிவுடையார்”

என்பது (179). அவர்தம் அத்தன்மைகளே ஆக்கம் பலவற்றையும் தரும் என்றும் கூறினார்.

வெஃகாமை அறத்துப்பாலில் உள்ளது. பொருட்பாலில் உள்ள 'தெரிந்து செயல்வகை' என்னும் அதிகாரத்தில்,

“ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்”

என்கிறார்.

(463)

“கருதுவது ஆக்கம்; செய்வது முதலையும் இழந்து போகும் செயல்; இதனை அறிவுடையவர் செய்வாரா? என்கிறார்.