உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

நற்குடி இயல்பு பற்றிக் கூறுவது குடிமை அதில், “குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்"

என்றும் (954)

“சலம்பற்றிச் சால்பில செய்யார்”

என்றும் (956)

அடுத்து வரும் மானத்தில்,

"சீரினும் சீரல்ல செய்யாரே”

என்றும் (962) கூறுவன எண்ணத்தக்கனவாம்.

குன்றுவ (குறைந்தவை, குறையுடையவை) செய்யாமை, சால்பில் (தகுதிக் குறையுடையவை) செய்யாமை,

339

சீரினும் சீர் அல்ல (சிறப்பினும் சிறப்பானவற்றைச்) செய்யாமை

என்பவை பண்பாட்டு வகைக்கு உரியவையாகச் சொல்லப் படுவன, எனினும், உருவாக்க வகைக்கும் உரியவையேயாம்.

இவ்வாறே,

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்"

"உள்ளற்க உள்ளம் சிறுகுவ”

“எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்"

(596)

(798)

(470)

என்னும் அடிப்படைப் பண்பாட்டியல்குறிப்புகளும், பொருள் உருவாக்கத் தரக் கொள்கைக்குக் கொள்ளத் தக்கனவேயாம்.

ஆக்குபவை எல்லாம் உயர்தரத்தாக இருக்க ஆக்கல்; ஆக்குவனவற்றில் தரங்குன்றியவற்றை ஆக்கவேண்டும் என்னும் சிறுகிய எண்ணமும் வாராது இருத்தல்; செய்தார்க்கும் செய் பொருளுக்கும், செயற்களத்திற்கும் இழிவுவாரா வகைப்பட்ட உயர்தர உருவாக்கத்தைப் புரிதல் என்பனவெல்லாம் கொள்ள வைக்கும் கொள்கை விளக்கங்கள் இவை எனக் கொள்ளல் புத்தம் புதிய பொலிவுப் பார்வை ஆகும்.

ஒப்புரவு நெஞ்சும் உயர்நோக்கும் மேம்பட்ட செயற்பாடும் உடைய தக்ககோரை உலகம் ஒருபொழுதும் மறவாது. அவர்களைக் காலம்காலமாகப் பாராட்டுதலைக் கடமையாகக் கொள்ளும் என்னும் முகத்தால்,