உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு"

என்று உறுதி கூறுகிறார். (994)

இனிப்பொருள்களுக்குத் தரப் பெறும் அடைமொழி களைக் கொண்டேயும் அதன் தரம் அறிய வாய்ப்பு உண்டு. அவ்வகையில் ஆன்ற பொருள், உறுபொருள், எண்பொருள், ஒண்பொருள், செம்பொருள், நற்பொருள், நுண்பொருள், பெரும்பொருள், மெய்ப்பொருள், வான் பொருள் என வருவனவற்றை எண்ணுக.

தரம் காண்டலில் 'அளவு' என்பது இன்றியமையாதது. அளவறிந்தார். அளவென்னும் ஆற்றல் புரிந்தார். அளவின்கண் நின்று ஒழுகுவார் என ஓரிடத்திலேயே தொடர்ந்து கூறுவார்

(286-88)

அளக்குங்கோல், நீட்டியளக்குங்கோல் என்றும் (710, 796) சமன் செய்து சீர்தூக்குங்கோல் (118) என்றும் அளவைகளைக் குறிப்பிடுவார். சமன் செய்து சீர்தூக்கும் கோலை நயன்மை எனப்படும் நடுவு நிலைக்கு எடுத்துக் காட்டாகச் சுட்டியமை இற்றை முறைமன்ற அடையாளத்தொடும் எண்ணிப் பார்த்து மகிழத்தக்கதாம்.

தங்கத்தின் மாற்றுக் காணற்கு 'உரைகல்' இருத்தலையும், உரையாணி இருத்தலையும் ஆணிப்பொன், ஆணிமுத்து என்னும் வழக்குண்மையையும் அறிவோம். வள்ளுவர் பொன்னை உரை காணற்காம் கட்டளைக் கல்லை உரைக்கிறார். மாற்றுக் குறை நிறைகள் காணப்பட்டமை கட்டளைக் கல் கொண்டு தெளியலாம். ஆணிப்பொன் என்பதும் ஆணிமுத்து என்பதும் தரமிக்கவை என அரசு முத்திரை பெற்றவையாம். கட்டளைக் கல் குறிப்பால் அவற்றையும் நாம் கருதிக் கொள்ள இடமுள்ளதாம்.

பதடி என்பது பதர். மணியென்னும் உள்ளீடு இல்லாத நெல்லே பதராகும். ஆதலால் தவசத்தை உலர்த்தித் தூற்றித் தரப் படுத்திய செய்தி அறியலாம். கருக்காய் என்பதும் குறைதரம் சுட்டுவதே (1306) 'காழில் கனி' என்பது உயர்தரம் உரைப்பதாம் (1191).

அந்நெல்லை வைக்கும் வகையில் வைத்துப் போற்றினர் என்பது'வைப்புழி' என்பதால் விளங்கும் (226). பொன்னைப் பொதிந்து வைத்தலும் புகலப்படுகின்றது (155).