உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

சொல்வானும் கேட்பானும் ஏற்றத் தாழ்வில்லாமல் நிரந்த நிலையில் இருத்தல், சொல்வான் இனிது சொல்லுதல், சொல்லும் வகையால் சொல்லுதல் என்பவற்றைக் கொண்டால் உலகம் ஏற்று உவப்புடன் அதனை முடிக்கும் என்பது இதன் விளக்கமாம்.

ஓர் ஆசிரியர் சினத்தால் ஒரு மாணவனைப் பள்ளியை விட்டு வெளியேறச் சொன்னார்.

நான் பணம் கட்டிப் படிக்கிறேன்; உங்கள் வகுப்புக்குப் பின்னரும் வகுப்பு உண்டு. அவ்வகுப்பில் நான் படிக்கவேண்டும். உங்கள் வகுப்பை விட்டு வேண்டுமானால் வெளியே போய் விடுகிறேன். பள்ளியை விட்டுப் போக மாட்டேன் என்றான் மாணவன்.

நீ மாணவன் போல் நடந்து கொள்ளவில்லை என்றார் ஆசிரியர் நீங்கள் எப்பொழுது ஆசிரியர் போல் நடந்து கொள்ள வில்லையோ, அப்பொழுது நான் மாணவன்போல் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றான் மாணவன்.

அந்நிலையில் இன்னோர் ஆசிரியர் அம்மாணவனிடம். "நீ அவர் சொல்லியபடி நட’

என்றார். அவன், பள்ளியை விட்டுப் போக நடந்தான்.

அவ்வளவில் சினந்து வெளியேறச் சொன்ன ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு, “நான் சொன்ன போது மறுத்தாய்; இவர் சொன்னவுடன் கேட்டுக் கொண்டாயே" என்றார்.

அம் மாணவன் "அவர் என் பெற்றோரினும் என்மேல் அக்கறை கொண்ட ஆசிரியர்; அவர் வெளியே போ என்று சொல்லாமல் கிணற்றில் விழு என்றாலும் விழுவேன். ஏனெனில், அதனால் எனக்கு நன்மை கருதியே சொல்கிறார் என்ற நம்பிக்கை உண்டு” என்றான்.

இந்நிகழ்ச்சி மெய்யாக நிகழ்ந்ததே! இதனை உணர்ந்தால் இதனுள்ளாக இழையோடும் உண்மைகள் எளிதில் விளக்கமாகும்.

அதிகாரத்திறனும் அன்பும், வன் சொல்லினும் இன் சொல்லும், மிகுந்த ஆற்றல் உடையவை என்பது உள்ளங்கைத் தேங்காயாய் வெள்ளென விளங்கும்.

சுற்றந்தழால் என்பதோர் அதிகாரம். அது சுற்றத்தினரைத் தழுவிக் கொள்ளுதல் என்னும் பொருளதாம். அது, தொழில்