உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் இ

343

பிறர் சொல்லும் இனிய சொல் நமக்கு உவப்பாக உள்ளது. அவர் சொல்லும் வன்சொல் கேட்கப் பொறுக்காததாகவும், மாறாத வடுவாகவும் உள்ளது. அவ்வாறு இருத்தலை அறிபவன் பிறரிடம் வன்சொல் வறுவது என்ன தன்மையோ என்கிறார் வள்ளுவர்.

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது”

(99)

இன்னும் இன்னா செய்யாமை அதிகாரத்தில் காரத்தில் இதனை நன்கு விளக்கிக் கூறுகிறார்.

"தீமையானது என்று நீ உணர்ந்ததை, நீ பிறனுக்குச் செய்யலாமா?” என்றும்,

66

"தனக்குத் தீமையானது என்பதை அறிபவன் பிறர்க்கு எப்படித் தான் தீமை செய்கின்றானோ" என்றும் கூறுகிறார்.

“இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கட் செயல்”

“தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்"

என்பவை அவை.

(316)

(318)

நினைவு, சொல், செயல் என்னும் மூன்றும் ஒத்துச் செல்வான் ஒருவன் உளனாயின் அவன். அவன் வாழும் பரப்பும் சூழலும் கடந்து, உலகோர் உள்ளத்தில் எல்லாம் உறைபவனாகத் திகழ முடியும் என்கிறார். அது,

“உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்'

என்பது.

அவன் உலகோர் நெஞ்சில் இருப்பவன் மட்டும் அல்லன். அவன் நினைப்பவற்றை எல்லாம் உலகம் ஏற்றுக்கொண்டு அவன் சொல்வழியில் செல்லும் என்றும் கூறுகிறார்.

“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்’

என்பது எது.

99