உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

355

இறங்கினார்; குளிர்ந்தார்; அதற்குமுன் தராத அளவுக்குப் பெரிய அளவு ஆணைதந்தார். பின்னர் வீட்டுக்குச் சென்று தற்செயலாகக் கணக்கைப் பார்க்கப் பாக்கி இருப்பு கண்ணிற் பட்டது. அதனை மறையாமல் கூறி நன்றி பாராட்டினார். தாம் பெற்ற பிள்ளைக்கு 'டெட்மார்' என்று பெயரிடும் அளவுக்கு நட்பு விரிந்தது. பின்னே வாடிக்கை பற்றிச் சொல்லவேண்டிய தில்லையே! வாழ்க்கையில் வெற்றி (165-6).

நிறைவாக வள்ளுவ வழித் தலைவி வாழ்த்தும் வாழ்த்தினைக் கூறி மகிழலாம்.

எடுத்த செயலை இனிதில் முடித்து வெற்றியைத் தருவானாக வேந்தன். அதனால், தலைவன் மனைக்குத் திரும்பி, இன்று மாலைப் பொழுதிலே கூடி யாம் விருந்து கொண்டாடி மகிழ்வோமாக!

“வினைகலந்து வென்றீக வேந்தன்; மனைகலந்து மாலை அயர்கம் விருந்து"

(1268)

முற்றிற்று