உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

தங்களைப் போன்ற பெருமக்கள் வாடிக்கையை இழக்கவே நேரும்" என்று தங்கள் வணிக நிலையக் குறையாகவே கூறினார். தங்கள் தவற்றுக்குத் தண்டனையாக, ஆங்கு வந்து சென்றதற்காம் வண்டிச் செலவு தருதல் தங்கள் பொறுப்பே என்று முனைந்தார். அவர்கள் வணிகச் சீர்மை அழகப்பரைத் தீராவாடிக்கையர் ஆக்கி விட்டதல்லவா!

புதியவராக ஒருவர் வருகிறார் என்றால் அவரை விருந்தர் என்பது நம் பழைய வழக்கம். விருந்தரை வயப்படுத்த வல்ல கருவியாக இருப்பதில் தலையாயது புன்முறுவல். பூ செய்யாத நறுமையையும் புன்முறுவல் செய்துவிடும்." முகமலர்ந்து இன்சொல் கூறும் எவரும் தம்மைக் காணவருவாரை வயப்படுத்தி என்றும் தம்மவராக்கிக் கொள்வார்... அது பொதுவாக நலம் சேர்ப்பதினும் வாணிகத்தில் நலம் சேர்க்கும் வகை பெரிதாம்.

திருவள்ளுவர் முகமலர்ந்து இன்சொல் கூறுவதுஅக மலர்ந்து விருந்தோம்புதலினும் சிறந்ததாகக் கூறுவார்.

(92)

'நகுதல்' என்னும் நற்பண்பை ஒருவர் கொள்ளா திருந்தால், அவர் பகலிலேயே இருள்மண்டிய இரவில் இருப்பவராவார் என்கிறார்.

(999)

நகுதல் இல்லாமையுடன் சினமும் அவரிடத்திருந்தால் வேறு கேடு வேண்டியதில்லை. நகையும் உவகையும் கொல்லும் பகைசினம் என்பது வள்ளுவர் முடிவு (304) டெட்மார் என்பதோர் வெப்பு ஆடைக் (உல்லன்) கடை அதில் ஒருவர் நுழைந்தார். அவர் அக்கடைக்குப் பதினைந்து தாலர் பாக்கிரதர வேண்டியிருந்தது. அதற்குப் பல கடிதங்கள் எழுதியும் தரவேண்டியதே இல்லை என மறுத்துவிட்டார். பாக்கி தரவேண்டியதில்லை என்றும் வாடிக்கை இனி வைக்கப் போவதில்லை' என்றும் உறுதியாகக் கூறவே வந்தார்.

அவர் சொல்வது தவறு என்று புரிந்தும், பொறுமையாக இருந்தார் டெட்மார். கூறுவதை எல்லாம் நன்கு கேட்டார். இதனைச் சொல்ல வந்தற்கு நன்றி கூறினார். "எங்களுக்கு ஆயிரக்கணக்கானவர் கணக்கு தங்களுக்குத் தங்கள் கணக்கு மட்டுமே. ஆதலால், தாங்கள் சொல்வதே சரியாக இருக்கும்” என்றார். “நீங்கள் தரமான பொருள்கள் வாங்கத் தக்க கடைகள் இவை எனவும் பரிந்துரைத்தார். வெகுண்டு வந்தவர்