உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் இ

353

வேண்டும். அதற்கெனப் போலிமை வேண்டுவதில்லை. வாய்மை விளங்க வேண்டும்.

'கூறாமை நோக்கிக் குறிப்பறிதல்' வேண்டும் என்பதைத் தனிச் சிறப்பியல் கலையாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதனையும் தனி வாழ்வுக் கெனவும் பொதுவாழ்வுக் கெனவும் இரண்டாகப் பகுத்து வைக்கிறார். பொருட்பாலில் உள்ள குறிப்பறிதல் பொதுப் பார்வைக்குரியது. இன்பத்துப் பாலில் உள்ள குறிப்பறிதல் குடும்பப் பார்வைக்குரியது. குறிப்புணர்ந்து கடனாற்றும் வன்மை எவர்க்கு உண்டோ, அவர்க்கு வெற்றியும் புகழும் கட்டாயம் உண்டு. அவர் திறமே தெய்வத்திறம் என்றும் கூறுகிறார் வள்ளுவர்.

வாடிக்கையாளரைப் பற்றிக் காந்தியடிகள் கூறும் கருத்தைக் கருதலாம். "வாடிக்கையாளர் என்பவர் நம் இடத்திற்கு வரும் முதன்மையான ஒருவர். அவர, நம்மை நம்பியில்லை; நாம், அவரே நம்பியுள்ளோம். நம் வேலையில் அவர் குறுக்கிட வில்லை; நம் வேலைக்கு மூலமானவர்; அவர் நம் வணிகத்திற்கு அயலார் அல்லர்; அவர் அதன் உறுப்பு; அவருக்குச் சேவை செய்வதன் மூலம் நாம் அவருக்கு உதவி செய்யவில்லை; சேவை செய்ய நமக்கொரு வாய்ப்பை அளித்தன்மூலம் அவர் நமக்கு உதவி செய்கிறார்" என்று கூறுகிறார்.

வள்ளல் அழகப்பர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார். விளையாட்டுப் பொருள்கள் விற்பனையகம் ஒன்றில் புகுந்து, பூப்பந்தாட்ட மட்டை ஒன்றை வாங்கினார். அதனை மறுநாள் ஆட்டத்திற்கு எடுத்தபோது கீறல் இருப்பதைஅறிந்தார். அதனால் அக்கடைக்குச் சென்று அதனை மாற்றித்தரக் கேட்டார்.

கடை உரிமையாளர் தம் குறையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மன்றாடினார். அலுவல் ஊழியரை அழைத்துச் சரியாகப் பாராமல் தந்ததால் ஒரு பெருமகனார்க்கு எவ்வளவு வீண் தொல்லையைத் தந்துவிட்டாய் என்று கூறினார். “அவர் குறையில்லை; நான் பார்த்து வாங்கத் தவறிவிட்டேன்" என்றார் அழகப்பர்.

"இல்லை! இல்லை! நீங்கள் பார்த்து வாங்க வேண்டும் என்ற நிலை எங்கள் நிறுவனத்திற்கு ஆகாது. நாங்கள்தாம் பார்த்து அதை வாங்கியிருக்க வேண்டும்; பார்த்துத் தந்திருக்கவும் வேண்டும்; இல்லாவிட்டால் எங்கள் பொறுப்புப் பொறுப்பாகாது;