உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

இளங்குமரனார் தமிழ்வளம் 40

அவ்வாறு எண்ணுதலும், அவற்றில் பழுத்த திறமும், பட்டறிவும் வாய்ந்தவர்களோடு எண்ணவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

சிலர் திறமாக எண்ணுவர்; தாமே எண்ணுவதுடன் தக்காரைக் கலந்து அவர்களோடு எண்ணுவர்; எனினும் என்ன! அதன்படி திறமாகச் செய்து முடிக்க மாட்டார். அத்தகையர் தலைமை பெருமை தாராது என்றும் சுட்டுகிறார்.

“முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்"

என்பது அது.

(640)

தலைமைக்குக் கண்டிக்கவும் தண்டிக்கவும் நேரும் பொறுப்புகளும் உண்டே. அந்நிலையிலே எப்படி நடந்து கொள்ளுதல் வேண்டும்.

தக்க வகையில் ஆராய்தல்; ஒருசார்பில்லா நடுவு நிலையில் இருந்து நடவடிக்கை எடுத்தல் ஆகியவை வேண்டும்

(561)

தண்டிக்க வேண்டும் நிலையிலும் பெரிதாகக் காட்டிச் சிறிதாகத் தண்டனை இருக்குமாறு செய்தல் வேண்டும்

(562)

பொறுத்துக் கொள்ளும் நிலைமையைப் போற்றினால், பின்விளைவு தீதாம் என்னும் நிலைமை உண்டாகு மானால் தான் தண்டித்தலைக் கொள்ளலாம் (579) கடுஞ்சொல்லோ, அளவுக்கு மிஞ்சிய தண்டனையோ தலைமைப் பெருமையைத் தகர்க்கும் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

(566)

தொழிலாளர் உறவு, தலைமைத் தகுதி, என்பவற்றைக் கண்ட நாம் பொதுமக்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவையும் எண்ணுதல் வேண்டும்.

பொதுமக்கள் அல்லது வாடிக்கையாளர் என்பார் நம்மால் மதிக்கப்பட்ட வேண்டியவர். அவர் வாடிக்கையே நம் தொழிலும், உருவாக்கமும், வாணிகமும் ஆம். ஆதலால், அவரை நிறைவு செய்யாமல் நம் தொழில் வாழ்வு நிறைவு வாழ்வோ, வெற்றி வாழ்வோ ஆகாது. அதனால் அவர் உள்ளக் கிடக்கை அறிந்து, அவர் உவப்புறும் வகையில் நம் செயற்பாடுகள் இருத்தல்