உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் இ

351

இன்னவற்றை யெல்லாம் தொழில் தலைமையர்க்கு

எடுத்துக் கூறுகிறார் வள்ளுவர்:

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு

(432)

“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை”

(439)

66

“காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்"

(440)

நல்ல அறிவுக் கூர்ப்பு; செயல் திறமை; கட்டுத்திட்டம்; ஒழுக்க மேம்பாடு இவ்வெல்லாவற்றையும் உடையவராக இருப்பினும் அவர் தாம் தனிமரமாக நிற்றல் ஆகாது. தக்கவர் சிலரைத் தெரிந்து தேர்ந்து ஒட்டுறவாக இருத்தல் வேண்டும். நல்ல கருத்தே எனினும் நான்குபேர் அறிய அவர்கள் கருத்தும் இணைய எடுக்கும் முடிவாகவே இருப்பின் ஆங்குப் பொதுவுறவு திகழும். அவரவர்க்கும் ஒப்பும் கருத்தாகக் கொண்டு ஒன்றுபட்டுச் செயலாற்ற உதவும் அதனால்,

“முதலிவார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை”

என்றும்,

“தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்”

என்றும் கூறினார்.

(449)

(446)

சார்பும் கொண்டு, தக்காரும் அமைந்து, செயல்படும்

வகையையும் வள்ளுவர் தெளிவிக்கிறார்:

66

'அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்”

"தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்”

என்பவை அவை.

(461)

(462)

ஆகும் செலவு, வரும் வரவு, தொடர்ந்து வாய்க்கும் ஆக்கம் என்பவற்றையெல்லாம் எண்ணிச் செய்ய வேண்டும் என்றும்,