உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

79

பண்பாட்டுப் பெருமித ஒட்டு மொத்தத்தை இன்று நம்முன் எவரொருவரேனும் நெஞ்சாரக் கூற முடியுமா?

ஓரவை, கற்றோர் பேரவை; ஆங்குளார் எத்தகையார்? நற்குடிப் பிறப்பை ஆடையாக உடுத்தவர்;

நூற் கல்வியை மாலையாகச் சூடியவர்; ஒழுக்கத்தை அணிகலமாகப் பூண்டவர்;

வாய்மையை விரும்பி உண்ணும் உணவாகக் கொண்டவர்;

தூய காதல் இன்ப இல்லத்தில் தங்கியவர்;

நடுவு நிலை என்னும் பெரிய நகருள் வாழ்பவர்;

பொறாமை ஆசை இல்லாமை ஆகிய இருபெருஞ் செல்வங்களையும்

ஈட்டிக் கொள்பவர்;

சொல்லும் சொல் பிழைபடா மேதக்க வாழ்வினர்,

எட்டுவகையாகச் சொல்லப்படும் இக்கட்டமை ஒழுக்கத்து மேலோருடன் ஒரே ஒரு நாள் இருக்கும் பேறு வாய்ப்பது இப்பிறவிக்கு மட்டுமில்லை எப்பிறவிக்கும் பேறாகும்.

என்று அருமையாகக் கூறுகிறது ஆசிரியமாலை என்னும் நூல் (புறத் திரட்டு.827)

தகுதி இல்லார் தம் அவைக்கண் வரின் அவரின் தகுதி யின்மை கருதி இகழாது, அவரையும் தம்மனைய தகுதியாளர் ஆக்குவது சான்றோர் அவையம் என அதன் புகழ் பாராட்டும் மற்றொரு பாட்டு.

கன்றுகளும் ஆக்களும் மேய்ந்த நிலத்திலேயே அல்லல் இன்றி உறைகின்றன; கால்நடையாக நடந்து செல்வார் தாம் விரும்பும் இடத்தில் தங்குகின்றனர்; உழவர் களத்தில் விளை பொருட்கள் காவல் இல்லாமல் கிடக்கின்றன; என்று அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியின் நாட்டைப் பாடுகிறார் அரிசில்கிழார் (புறம்.330) இவற்றுள் காண்பவை கற்பனை இல்லை என்பதை இற்றை முதியர் கண்டவை தானே! இவ்வளவு விரைவிலா மக்களாட்சி, மாக்களாட்சி ஆகிவிட வேண்டும்; ஆக்கி விடவும் வேண்டும்!

எவரும் எளிதாகக் காண வாய்ப்புத் தருதல் பண்பாடு முகத்துக்கு முகம் மலரப்பார்த்தல் பாண்பாடு

(991)

(93)

உள்ளத்தில் இருந்து உவகை ஊற்றெடுக்கப் பேசுவது பண்பாடு (93)