உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

பொற்கலத்தில் பாலொடு தேன் கலந்து ஊட்டவும் உண்ணாளாய்ச் செல்வச் செழிப்பில் திகழ்ந்தவள், உவலைக் கூரை ஒழுகிய இல்லில் வாழ்ந்து, முரிவாய் ஆன கலத்தில் மான் உண்டெஞ்சிய கலங்கல் நீரை எடுத்து உப்பிலிவெந்ததை உவகையோடு உண்டு, ஒன்றன் கூறாடை உடுத்து வாழ்ந்த கற்பு, பண்பாட்டுக் கொள்கலம் அல்லவோ! "கேளிர் போலக் கேளாது புக்கு" என்பது எவ்வளவு பெரிய பண்பாட்டு மையம்.

ஆற்றுப்படை என்னும் அருமை இலக்கியத் தோற்றரவு தான் என்ன? யாம் பெற்ற வளத்தை இவரும் பெற வேண்டும் என்னும் அருட்காதலால், இவ்வழியே சென்று இங்கு இனிதே தங்கி, இன்னாரைக் கண்டு கேட்குமுன் வேண்டுவனவெல்லாம் பெற்று இனிது வாழ்க என்பது தானே அது. பத்துப்பாட்டில் செம்பாதி ஆற்றுப்படை எனின் அதன் அருமை தான் என்ன?

வறிய புலவன் தான் பெற்ற வளப்பரிசிலைத் தானே வைத்து வாழ விரும்பாமல்,

66

‘அருமை மனைவியே, உன்னை விரும்பி வாழ்வார்க்கும், நீ விரும்ப வாழ்வார்க்கும், பலராகச் சிறந்த கற்புடைய உன் பெரிய சுற்றத்தினர்க்கும், நம் பெரிய சுற்றம் பசியால் வாடிய போது வாய்த்த போது தருக என உதவியவர்களுக்கும், இன்னவர் என்னாது என்னைக் கேட்டுத் தரவேண்டும் என்பதும் இல்லாது நாமே வைத்துக்கொண்டு நெடுங்காலம் நலமாக வாழ்வோம், என நினையாது எவ்வெவர்க்கும் கொடுப்பாயாக. இக்கொடை வளமான முதிரமலைத் தலைவன் குமணன் வழங்கியது ஆகும்" என்னும் பெருஞ்சித்திரனார் பெரும் பண்பாட்டுரை பேசிமுடிவதோ?

வினாவிய

(புறம் 163)

"ஏன் உமக்கு நெடிய வயதாகியும் நரை தோன்றவில்லை?” என்று உறையூர்ப் பெருமக்களுக்குப் பிசிராந்தையார் கூறிய பண்பாட்டு ஓவியம் தீட்டிக்காட்டும் அளவில் அமைவதோ?

'பண்பால் உயர்ந்தவள் என் மனைவி; மக்களும் அப் பண்பாட்டில் நிறைந்தார்; யான் நினைப்பதை நினைத்தவாறே இயற்றும் உதவியாளர், வேந்தனோ நல்லதை அல்லது செய்யான்; ஊரில் வாழும் சான்றோரை எப்படிப் பாராட்டுவேன். “ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்" அவர். அச்சான் றோரும் ஒருவர் இருவரா? எம் ஊரில் வாழ்வோர் பலர்; ஆதலால், எமக்கு நரை வரவில்லை என்கிறாரே! இவ்வாறு