உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

81

(திருக். 282) சான்றாண்மையின் மேல்வைப்பாய்ப் பண்பாடு அமைதலை விளக்குவன இவை.

பண்பாட்டின் முழுதுறல் விளக்கம்,

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் ளல்லாம் உளன்'

என்பது (294)

இன்று நமக்குள்ள வறுமை செல்வ வறுமை அன்று; விளைவு வறுமை அன்று; அறிவு வறுமை அன்று; நாகரிக வறுமை அன்று; நமக்குள்ள பெருவறுமை, பண்பாட்டு வறுமை எவ்வளமைகளையும் இல்லாமல் தொலைக்கும் வறுமை பண்பாட்டு வறுமை. அவ்வறுமையைத் தொலைத்து மீட்டெடுப்புச் செய்தல் பண்பாட்டுக் காதலர் கடமையாம்.