உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஒரு தீர்மானம்

ஒரு காலத்தில், “சப்பான் உருவாக்கமா? தரக் குறைவானது” என்னும் எண்ணம் உலகவர் கருத்தில் இருந்தது.

தர மேம்பாட்டை 'இசாசோ,என்பவர் விரும்பினார். அமெரிக்காவில் இருந்து உருவாக்க மூளையர் சிலரைச் சப்பானுக்கு அழைத்து உருவாக்கத்தில் மேம்பாட்டைப் புகுத்தினார்.

தரக் கட்டுப்பாட்டையும் மேம்பாட்டையும் உலகுக்கு வழங்கிய முதல்வரும் மூலவரும் 'இசவோ' என அவருக்குப் பெயராயிற்று.

இப்பொழுது தரக்கட்டுப்பாட்டு ஆய்வில் சப்பான் தலைநிற்கும் நாடாகத் திகழ்கின்றது. அதன் திட்டவழியை இந்தியாவும் பற்றிக் கொள்ளும் நிலையில் உள்ளது. தரக் கட்டுப்பாட்டுக் குழுமம் (Quality Control Circle) 'குவாலிடி கண்ட்ரோல் சர்க்கிள்' கெக்கந்திராபாத்தில் இருந்து இயங்கு கின்றது!

சிந்திக்க வேண்டும்; ஓர் எளிய. ஆனால் அரிய செய்தி இது!

6

விலை போட்டு வாங்கவா முடியும் கல்வியை?' என்றது பாவேந்தர் வினா? ஆனால், “விலை தந்து தான் வாங்க முடியும்” என்பது நாம் காணும் இன்றை நிலை!

விலை தந்து ஆயிரம், பல்லாயிரம், பலஇலக்கம் என விலை தந்து வாங்கும் பொறியியல், வேளாண்மை இயல், மருத்துவ இயல் கல்விக்கு அரசின் செலவு என்ன?

ஒவ்வொரு மாணவர் பெயராலும் பல இலக்கங்கள்! வறிய நாட்டின் பெரிய செலவு. பட்டுணி கிடப்போர், பழங்கஞ்சிக்கும் பழங்கந்தைக்கும் ஓட்டைக் குடிசைக்கும் அலமருவோர் மல்கிய நாட்டில் தொழில் வல்ல மூளையரை உருவாக்கப் பல்லாயிரம் கோடியைக் குவித்தாகும் கட்டாயநிலை! உருவாக்கப்பட்டவர், தன்னை நலித்துக் கொண்டும் வதைத்துக் கொண்டும் உருவாக்கிய நாட்டுக்குத் தம் உருவாக்கத் திறனை மூளைக் கூர்ப்பைப்