உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

83

பயன்படுத்துவது, ஒன்றுக்குப் பத்தாக வழங்குவது அல்லவோ கடமை! ஆனால் நிகழ்வது என்ன?

66

“ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை”

(837)

என்பது போலத் தம் நாட்டுக்குப் பயன்படாமல் பிறநாட்டுக்கு வளமும் வாய்ப்பும் பாராட்டும் பரிசும் வாய்க்கவே பிறநாடுகளை நோக்குகின்றனரே!

பிற நாட்டு நல்லறிஞர் திறங்களை இங்கே கொண்டு வந்து வளர்ப்பதற்கு மாறாக இந்நாட்டு வளத்தையும், வாழ்வையும் வாய்ப்பையும் பிறநாட்டுக்கே உரிமையாக்கி உவக்கின்றனரே. அந்நாட்டைக் கொழுக்க வைக்க ஆங்கேயே குடியுரிமை யராகவும் நினைக்கின்றனரே! இந்த நிலை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெருந்தகைமைத் தாய்நாட்டுக்குச் செய்யும் கைம்மாற்றுக் கடனாமா?

போர்க்களத் தலைமையை, உள்ள உறுதியாளர் தாங்குவது போல நாட்டுக்கு மேம்பாட்டைத் தாங்குவதற்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ள வேண்டியவர், சுடர் நோக்கி (சூரியகாந்தி) போல அயல் நாட்டையே நோக்கிக் கொண்டுளர் என்றால் அதற்கு அடிப்படை அவர்கள் தந்நலமே என்று மட்டுமே கூறிவிடுதல் பண்பாகாது! அவர்களுக்கு அவ்வார்வம் கற்கும் பருவத்திலேயே கருவாகக் காரணம் என்ன என்பதையும் எண்ணத்தான் வேண்டும்.

கற்றுத் தேறிய மூளைக் கூர்மையரும், தொழில் திறத்தரும் அவற்றைப் பயன்படுத்தி மேலும் மேலும் வெற்றிக் கனிகளைக் கொய்து தருதற்குத் தரும் மேம்பாட்டுத் திட்டங்களையும், ஆய்வுக் களங்களையும், பிறந்தமண் உருவாக்கித் தருகின்றதா? இல்லையே! இந்நிலைமை மாறாத வரை, அயல்நாட்டு மோகம் நீங்க வழியுண்டா? அதற்கும் ‘இல்லையே' என்பதா மறுமொழி!

அண்மையில் நிகழ்ந்த 'வளரும் நாடுகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட முடிவுகளுள் ஒன்று இன்றியமையாதது. அது “வளரும் நாட்டு அறிவாளர், தொழில் வல்லார், உருவாக்கத் திறவோர் தம் ஆற்றல் தம் நாட்டுக்குப் பயன்படும் வகையில் கடனாற்றி நாட்டை உயர்த்த வேண்டும்" என்பதாகும்.

ஆதலால் பிறந்த மண்ணுக்குத் தாம் பெற்ற திறங்களை நன்றியுணர்வுடனும், நல்லெண்ணத்துடனும் முழுமையாக