உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம்

5

எல்லாவற்றையும் துறந்து வடக்கிருத்தலால் வீட்டின்பம் பெறுவர். அதனினும் விஞ்சியதான என்றும் பிறவாப் பேரின் பமும் பெறுவர். இதில் ஐயமில்லை ஆனால் ஐயங்கொள்வோர் இங்கு உண்டானால் ஒன்று கூறுவேன். இவ்வின்ப நிலைகள் வரினும் வருக. வராது ஒழியினும் ஒழிக. இமயமலையின் உயரம் போன்ற உயர்ந்த புகழை உலகிலே நிலை நிறுத்திவிடுவது உறுதி. இதனைக் கருதியாவது யான் கருதிய நல்வினையைத் தடுக்காது இருக்க” என்றான். புழுங்கினவர்களும், புலம்பினவர்களும் வாய் பேசாமல் ‘வாளா’ இருந்தனர்.

சோழன் வடக்கிருக்கும் நிகழ்ச்சி நகரெங்கும் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். சோழனும் வந்தவர்களைக் கனிவுடன் நோக்கிக்கொண்டு அமைதியாக இருந்தான் பொத்தியார் என்னும் புலவர் ஒருவர் வந்தார். அவர் சோழன் உயிர் நண்பன்; சோழனைப் பிரிந்து அறியார். 'பொத்தில் நண்பின் பொத்தியொடும்' கூடி இன்புற்று வாழ்பவன் சோழன். என்பது பிசிராந்தையார் கூறிய உண்மை உரை இத்தகையர் நட்பினை எவ்வாறு அளவிட்டுரைப்பது?

L

உயர் பண்புடையவனும், உயிர்த் தோழனுமான சோழன்

வடக்கிருத்தலைக் கண்டு அடக்க முடியாக் கவலைக்கு ஆளானார். அவனை விட்டுப் பிரிந்து வாழ மனம் கொள்ள வில்லை. வேந்தனுடன் வடக்கு நோக்கி உட்கார்ந்தார். கூடியிருந் தோர் திகைத்தனர். “என்னே! புலவர் நட்பு; என்னே சோழன் பெருமை” என்று புகழ்ந்தனர், சோழன் நன்றாக அறிவான், புலவர் எப்படியும் பிரிந்து வாழமாட்டார் என்று. ‘உறுதியாக வடக்கிருந்து உயிர் விடத்தான் போகின்றார். அதனால் தடுப்பது தக்கது அன்று என்றாலும், அவர் வடக்கிருத்தற்கு உரியகாலம் சிறிது உள்ளது' இவ்வாறு உள்ளுணர்வால் அறிந்தான். “என் அருமை நண்பரே! உயிர்த் தோழரே! நீவிர் வடக்கிருப்பதைத் தடுப்பேன் அல்லேன். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள், உம் கடமைகளுள் ஒன்று எஞ்சியுள்ளது. அதனைச் செய்து முடித்து இவ்விடம் வருக! வந்து உம் விருப்பம் போல் செய்க" என்றான். ‘என் கடமைகளுள் எஞ்சியிருப்பது யாது?” என்றார். பொத்தியார். "மாந்தருக்குரிய கடமைகளுள் தலையாயது புதல்வரைப் பெறுதல். அக்கடப்பாட்டை நீர் செய்து முடித்தீர் இல்லை. ஆதலால் கருவுற்றிருக்கும் உம் மனைவியொடும் இன்னும் சின்னாட்கள் இனிதுவாழ்ந்து மைந்தன் ஒருவனைப் பெற் றெடுத்த பின் இங்கு வருக! உமக்கு இங்கே இடம் உண்டு

66