94
―
5 இளங்குமரனார் தமிழ்வளம்
“அறிவுமிக்க பெரியோர்களே! உங்கள் ஐயம் ஒழிவீர்களாக! சிறந்த நட்புடைய அவர் என்னை எக்காரணம் கொண்டும் இகழும் இழிபாடுடையவர் அல்லர். இனிய குணங்களை ஒருங்கே உடையர். உயிரொடு பின்னிய உயர் நட்பு உடையர். புகழைத் தொலைத்துவிடுவதான பொய்யை விரும்பாதவர். உம்
பெயரென்ன
66
என்று கேட்டோரிடத்து என் பெயர். கோப்பெருஞ்சோழன்” என்று கூறும் தன்மையர் இத்தகையரா வராது நிற்பர்? விரைந்து வருவர். அவர் வடக்கிருக்க இடம் ஒன்று வைம்மின்!" என்றான்.
ய
6
இந்த உரையாடல் நடந்து முடிந்தது. நாட்கள் சில கடந்தன. உண்ணா நோன்பால் அரசன் உயிர் ஒடுங்கியது. இந்நிலையில் வந்துவிட்டார் புலவர் ஆந்தையார். பாண்டிய நாட்டுப் பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த இவர் எப்பொழுதும் சோழன் நினைவாகவே இருந்தார். தன்னாட்டுச் சீரிய வேந்தன் ஒருவன் ருக்க, அவன் மேல் கொண்ட அன்பினும் பன்மடங்கு அன்பு கொண்டிருந்தார் வேற்றுநாட்டு வேந்தன்மேல். பொருள் நலம்கருதிச் சோழனொடு உறவு கொண்டாரோ? அன்று! அப்படி நினைத்திருந்தால் முன்னமே சோழநாடு தேடி வந்திருக்க மாட்டாரா? சோழன் கொடைக் கரங்கள் பொன் மழை பொழியச் செல்வ வெள்ளத்திலே நீந்தியிருக்கமாட்டாரா? அது அவர் விருப்பமன்று. வானிலே பறந்து செல்லும் அன்னப் பறவைகளை அழைத்துத் ‘தென்னங் குமரியிலிருந்து வடதிசை நோக்கிச் செல்லும் அன்னச் சேவலே! அன்னச் சேவலே! உன் பெடையுடன் சோழநாட்டின் தலை நகராம் உறையூர் நெடு மாடத்தே நீ தங்கு! சோழனை எவர் அனுமதியும் இன்றி எளிதில் காண்பாய். கண்டு பிசிராந்தையார்க்கு அடியேன் என்று ஒரே ஒரு சொல் மட்டும் சொல்லு. பிறகு பாரேன்; உன் மனைவியால் சுமக்கமுடியுமா? சோழன் தரும் பொன் அணிகலன்களை?" இப்படிக் கூறும் முகத்தால் சோழன் பெயரைச் சொல்லி வாழ்ந்தவர் புலவர் பிசிராந்தையார். சோழன் சொற்போலவே, செல்வக் காலை வராத அவர், அல்லல் காலை வந்தார்!
அருமை நண்பன் வடக்கிருப்பதைக் கண்டார். நெஞ்சத்தே நின்ற சோழன் உருவத்தைக் கண்குளிரக் கண்டார். வியப்பு அடைந்தாரா? திகைப்பு அடைந்தாரா? கசிந்து அழுதாரா, கவலைமுகம் காட்டினாரா? எதுவும் இல்லை. அமைதியாக வடக்கு இருந்தார்.