புறநானூற்றுக் கதைகள்
95
Ꮒ
புலவர் வருகை கண்டு வியந்து நின்ற மக்கள் வ க் கிருந்ததைக் கண்டு திகைப்படைந்தனர். பெருமூச்சுவி ஏங்கினர். சொல்லி வைத்துச் செய்தாலும் இப்படி நடக்காதே! எல்லோர் வாழ்விலும் நடக்கக்கூடியதா? நட்புக்கு ஒருவர் என்றால் இவர்களேதான்! கோப்பெருஞ் சோழனுக்குப் பிசிராந்தையார்! பிசிராந்தையார்க்குக் கோப்பெருஞ் சோழன். 'தொட்டுப் பழகும் புணர்ச்சி நட்பு வேண்டாம். உரையாடிப் பழகும் பழக்க நட்பே வேண்டும்" என்ற வள்ளுவனுக்கு வீடு தோறும் பொற்சிலை எடுத்துப் போற்றலாமே!
சோழனொடு ஒருங்கிருந்த ஆந்தையாரைக் கண்டார் பொத்தியார். சிந்தனையிலே ஆழ்ந்தார். அச்சிந்தனைக்கரு அரிய கவிதை மணி ஒன்றினை ஈன்றது.
"எவ்வளவு பெரிய பதவி? சோழவள நாட்டின் வேந்தன் என்னும் பதவி என்ன சிறியதா? இத்தகைய பெரும் பதவியிருந்தும் வடக்கிருக்கத் துணிந்த வேந்தனை நினைக்கும்பொழுது வியப்பாக உள்ளது. அதனினும் வியப்பாக உள்ளது மற்றொன்று. வேற்று நாட்டிலே வாழ்ந்த ஒருவன் இதற்கு முன் கேட்டலின்றிக் கண்டறியாத ஒருவன் கேள்வியே வழியாக, நட்பே துணையாக இத்துன்பப் பொழுதிலே இங்கு வந்தது. இவற்றுள் எதனை வியப்பது? ஒன்றை ஒன்று விஞ்சும் வியப்பு அல்லவோ?
“என் நண்பன் ஆந்தை இவண் வருவார்” என்ற அரசனுடைய பெருமையின் அளவைச் சொல்வேனா? அல்லாமல் அரசன் உரை பொய்யாகாமல் வந்த ஆந்தைப் புலவனின் அறிவின் முதிர்வைச் சொல்வேனா? இவற்றை நினைக்க நினைக்க வியப்பு அளவின்றி வளர்கின்றதே!
66
'தன் ஆட்சிக்கு உட்படாததும் அயலான் ஆட்சிக்கு உட்பட்டதுமான ஒரு நாட்டின் சிற்றூரிலே வாழ்ந்த இப் இ பெரியோனது நன்னெஞ்சத்தைக் கவர்ந்து கொண்ட பழமைப் பட்ட இப்புகழாளன் வாழ்வானாக! இவனை இழந்து விட்டதே உலகம்! அரியவனாம் இவனை இழந்த உலகம் இனி உய்யுமா? அந்தோ! இனி அதன் நிலைமை வருந்தத்தக்கதே.
பொத்தியார் புலம்பல் ஆந்தையாரைச் சிறிதும் தாக்க வில்லை. அவர்தான் தன்னை ஒரு நிலைப்படுத்திக்கொண்டு உட்கார்ந்துவிட்டாரே! புற நிகழ்ச்சி பற்றி ஏன் கவலைப் படுகின்றார்? ஆனால் பொத்தியார் உரை கேட்டு அருகில் நின்ற பலர் அழுது ஏங்கினர். அவர்களுள் கருவூர் பூத நாதனார் என்பவரும், கண்ணகனார் என்பவரும் முக்கியமானவர் ஆவர்.