உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

115

உண்டா?" என்றான். “ஆமாம்! நம்பியாக நீங்கள் வந்ததும் போதும். அன்று நடுக்கி வைத்ததும் போதும்" என்று கூறிக் கொண்டு முகத்தில் கோபத்தை வரவழைத்துக் கொண்டாள். “நீ அன்று கவலைப்பட்டதும் போதும்; கன்றையும் பசுவையும் துடிக்கவிட்டதும் போதும்" என்றான். ‘கல கல' என்னும் சிரிப்புக்குரல் அடங்கவில்லை. சுவரின் அண்டையில் மறவன்

நின்றுகொணடிருந்தான்.

அவன் பக்கத்திலே சில பச்சிலைகள் கிடந்தன. ஒரு கிண்ணத்தில் இலைச்சாறு இருந்தது. ஒரு தூரிகையைக் கையிலே பிடித்திருந்தான். என்ன வரையப் போகின்றீர்கள்’ என்றான் வரிப்புலி. “உடனே வெளிப்படும் உண்மையைப் பார்க்கிலும் காலங்கடந்து வெளிப்படும் உண்மைக்கே தனிப் பெருமை!" என்றான் மறவன். வரிப்புலி புன்முறுவல் பூத்துக் கொண்டே மங்கையை நோக்கினான்.

66

முன்னெல்லாம் சித்திரம் நன்றாக வரைய முடிந்தது. சித்திரக் கலைக்கு ஏற்றவாறு நரம்புகளிலே தளர்ச்சி நடுக்கம் எதுவும் முன் இல்லை. இப்பொழுது வயது போய்விட்டது. விரல்களும் மரத்துவிட்டன. ஆனால் கலைப்பித்து மட்டும் ருக்கிறது. அந்தப் பித்தினால்தான் இன்னும் ஏதோ நினைக் கும்போது வரைகின்றேன்.

"அந்தப் படத்திலே யானையின் முகத்தில் எவ்வளவு கவலைக் களை தோன்றுகின்றது. அதன் உடலில் தோன்றும் வளைவும், துதிக்கையிலே காணும் சுருக்கமும், கண்ணிலே வழியும் துயரும் உண்மையாகவே - தோன்றுகின்றன அல்லவா.

-

உயிர்க்கலையாகவே

யானையைப் பிடித்து இழுப்பவன் முகத்திலே பொலியும் வீர உணர்ச்சியை வரைய இன்னொரு முறை மங்கையே நினைத்தாலும் முடியாமல் போனாலும் போகலாம். வீரனின் கண்கள் கக்கும் கனல் பொறியும், தோள் தசையின் முறுக்கும், எப்படித்தான் உருவாகினவோ? வேறொன்றும் இல்லை மங்கையின் உள்ளம் உணர்ச்சி எல்லாம் இந்தக் காட்சியாகவே இருந்திருக்கிறது. அப்படியே கலையாக வடித்துவிட்டாள்.

ஏன் அவளே யானையாகவும். வரிப்புலியாகவும் மாறிக் கொண்டுவிட்டுத்தான். வரைந்துவிட்டாள். எனக்கு அப்படி முடிவதில்லை” என்று கூறிக் கொண்டே கலவைச் சாற்றினைத் தூரிகையால் துழாவினான்.