உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம் 5

மங்கை வரைந்திருந்த சித்திரத்தின் பக்கத்தில் ஒரு வரம்பு கட்டிக்கொண்டு வரைந்தான். ஏதேதோ சில கோடுகளை இடை இடையே தூரிகையால் வரைந்து கொண்டான். உருவம் புலப் படுமாறு வரையப்படவில்லை. சில மரங்கள், குடிசை, இவை தூரத்தில் தோன்றுவது போல உருவாகின. பக்கத்தே தோன்று மாறு ஒரு பலகை, அம்பு, வில் இவை உருவாகின. அவ்வளவுடன் அன்றைய வேலை நின்றது.

என்னதான் வரையப் போகின்றான் என்பதை வெளிப் படுத்தவில்லை வேங்கை. மங்கையும் புலியும் மாறி மாறி இது வாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் என்று பேசிப் பேசி நேரத்தைச் செலவிட்டனர்.

மீண்டும் மறவன் தூரிகையைப் பிடித்தான். தான் உட் கார்ந்துகொண்டு நிமிர்ந்து பார்ப்பது போல வரைந்தான். அதன் பக்கத்தில் நிற்கும் ஓர் உருவத்தைத் தொடங்கி வைத்துவிட்டான். இரண்டு மூன்று நாட்கள் தூரிகையைத் தொடவே இல்லை.

உங்கள்

எப்பொழுதும் சிந்தனையாகவே திரிந்தான். இன்று இருவருக்கும் ஒருவேலை. நமது காட்டைப் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள். வீட்டுக்குள்ளேயே அடை பட்டா கிடக்க கிடக்க வேண்டும்?” என்று அனுப்பிவைத்தான், மங்கையையும் புலியையும்.

தூரிகையை எடுத்துக் கொண்டு வரைந்து முடித்தான். அவனை அவனே நம்பவில்லை. இப்படியும் சித்திரம் அமைந்து விடும் என்று அவன் கனவுகூடக் கண்டது இல்லை. அடுத்து நின்று நோக்கினான் எக்குற்றமும் தெரியவில்லை. அதன் அழகை நோக்கிய வண்ணமே உட்கார்ந்திருந்தான். தான் பெற்ற பிள்ளை யின் முன்னழகையும் பின்னழகையும் பார்த்து மகிழாத தாய்

உண்டா?

வரிப்புலியும் மங்கையும் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள். மறவன் கதவை ஓடிப்போய் அடைத்தான். “அப்பா! கை! கை!” என்றாள் மங்கை. “என்ன? கையில் பட்டுவிட்டதா?” என்றான் வேங்கை. “ஆமாம்! பொய்! பொய்" என்று சொல்லிக்கொண்டே சுவரைப் பார்த்தாள். வியப்புத் தாங்க முடியவில்லை. “அப்பா!” என்று வாய்விட்டுக் கத்தினாள். வரிப்புலி அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். “ஏன் ஏன் உங்களுக்கு இப்படம் நன்றாகத் தெரியவில்லையா?' என்றாள். "தெரியாமல் என்ன! நன்றாகத் தெரிகிறது. ஆனால் என்னதான் வரையப்போகின்றார் என்பதை நான் நேற்றே அறிந்து கொண்டேன்' என்றான்.