120
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
புலியும் எவ்வளவோ தேற்றிப் பார்த்தனர். அது வேண்டுமா, இது வேண்டுமா என்று கேட்டனர். அவன் “த்தா, த்தா” என்று சொல்லி விடாமல் அழுது கொண்டே இருந்தான். “தாத்தா தூக்கிக் கொள்ள வேண்டுமா" என்று மங்கை, மறவனின் தோள் மீது ஏற்றினாள்.
அரியேறு மறவன் தோளிலே கிடந்த வில்லைப் பிடித்து இழுத்தான், “ஓ ஓ! உனக்கும் வேண்டுமா?" என்று சொல்லிக் காண்டே ஒரு மூங்கிலை வளைத்து அதில் கயிற்றைக் கட்டி வில்லாக்கி அரியேற்றின் தோளில் மாட்டினான். அரியேறு சிரித்துக் கொண்டே ஓடினான். “பொல்லாத பயல்; இப் பொழுதே வில் வேண்டுமாம்" என்று சிரித்துக் கொண்டான் மறவன்.
கதிர் மறைந்து இருள் கப்பிக்கொண்டு வந்தது. வேங்கை! அதோ பறை முழக்கம் கேட்டாயா? என்று சொல்லிக் கொண்டு வந்தான் கிழவன் ஒருவன். “ஆமாம்! ஏன்? என்று கேட்டான் மறவன். பாலூற்றில் இருந்து இப்பொழுது நான் வருகின்றேன். அங்கும் பறையடித்தார்கள். மன்னன் வாழ்க! செங்கோல் சிறக்க! மறக்குடி மக்களே மன்னவன் ஆணை!
இதுவரை நட்புப் பாராட்டி அடங்கி நடந்த அண்டை நாட்டினர் போர் வெறி கொண்டு புறப்பட்டுள்ளனர். மண்ணாசை கொண்டுவரும் அவர்களை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் வீட்டுக்கு ஓர் ஆள் புறப்படுக; படைக்கருவிகள் தாங்குக; உயிர்காத்துவரும் நாட்டின் மானங்காக்கப் புறப்படுக என்று முழக்கினான். அதைத்தான் இங்கும் சொல்ல வருகிறான் போலும்” என்றான்.
நாடுவிட்டு நாடு கடந்து மண்ணாசையால் எழுந்து விட்டான் மாற்று மன்னவன். சே! சே! இங்குள்ளவர்களை யல்லாம் எலியென எண்ணி விட்ட ானா என்ன? இந் நாட்டினர் உடலிலே குருதிதான் ஓடுகின்றது. அக்குருதியின் ஒவ்வோர் அணுவிலும் தாய் நாட்டுப் பற்றுத்தான் இருக்கின்றது என்பதை உணர்த்துவோம்; உணர்த்துமாறு இப்பொழுதே புறப்படுவோம்.
மறக்குடி மக்களே எழுங்கள். மன்னவன். ஆணைக்காகக் காத்துக்கிடக்க வேண்டாம் கிடைத்த கருவிகளை எடுத்துக் கொள்ளுங்கள் கிளம்புங்கள் போருக்கு. கிட்டிய பகையை வெட்டி வீழ்த்துங்கள்
என்று தெருவெல்லாம் சுழன்று