உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

121

ஆரவாரித்தான் மறவன். அவன் கிழவன் போலவா அப்பொழுது துடித்தான்!

மங்கையினிடம் 'ம்மா ம்மா” “த்தா த்தா" என்று கையை ஆட்டி ஆட்டிப் பேசினான் அரியேறு. அவனைத் தூக்கித் தோளோடு தோளாக அணைத்துக் கொண்டு “சிங்கக் குட்டியே இரு; சீறியெழுந்த பகைவர்களைச் சிதைத்து வருகிறேன்” என்று தழுவிக் கொடுத்துவிட்டு வேலுடன் புறப்பட்டான் மறவன்.

மலையூர் கிளம்பியது. இரவுப்பொழுதெல்லாம் ஊர் ஊராக நாடே திரண்டது. கதிர் கிளம்பியது; படையும் கிளம்பியது. பகைப்படை குழுமியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது. முன்னணியில் நின்றான் வேங்கை. வேந்தன் படைத் தலைவர்களை ஊக்கப்படுத்தினான். படைத் தலைவர்களை ஊக்கப்படுத்தினர் படைவீரர் யானை, குதிரை களை விரைவுபடுத்தினர். இமை மூடித் திறக்குமுன் நின்றவர் வீழ்ந்தனர்; வீழ்ந்தவர் இறந்தனர்; இறந்தவர் குருதியாற்றில் மிதந்தனர்.

வீரர்களின் கண்கள் சிவப்பேறின. உடனே வாளும் வேலும் அம்பும் சிவந்தன. உருண்டது தலை; புரண்டது உடல்; பெருகியது குருதி. படிந்தது சேறு.

மறவன் வேலைக்கொண்டு போர் செய்யவில்லை. விளை யாடினான். குதிரைகளைக் குத்தித் தூக்கிக் குடைபோலப் பிடித்தான். யானைகளை மருமத்திலே குத்திக் குத்திச் சாய்த் தான். காலாள் வீரர்களை வேலை வீசி, வீச்சுக்கு ஐவர் அறுவர் என வீழ்த்தினான். இவன் வீரன் அல்லன்; காலன் என்று யானைகளும் குதிரைகளும் கலங்கின. காலாள் வீரர்கள் ஓல மிட்டனர். கிடைத்த சமயத்தே விலங்குகளும் வீரர்களும் ஓட்டம் பிடித்தனர்.

பகைகொண்டுவந்த மன்னனுக்கு ஓடுபவர்களைத் தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாகிவிட்டது, மானம் தாழவில்லை அவனுக்கு; படைத்தலைவர்களை ஏவினான். ஓடும் கோழைகள் தொலையட்டும் வீரம் இருப்போர் காலைப் பின் வையாது தாக்கி முன்னேறட்டும் என்று முழங்கினான். சங்கம் ஊதினான். துடிப்பறை அடித்தான்.

பகைப்படை ஊக்கமுடன் கிளம்பியது யானைகளைச் சூறையாடும் வேங்கையைச் சூறையாடினால் அல்லாமல் வெற்றி இல்லை என என எண்ணித் தாக்கினர். மறவனை யானைகளின்