124
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
துடித்தான் வரிப்புலி. கற்சிலையைப் பார்க்கிலும். மறவன் வரைந்த படமும், “குறு குறு” பாட்டும் கொடுமை செய்தன - அம்மம்மா! மிகக் கொடுமை செய்தன.
L
மறவன் உயர் வீரத்தையும், வெற்றிச் சிறப்பையும் கேள்விப் பட்டு எத்தனை எத்தனையோ வீரர்கள் வந்து நடுகல்லுக்கு மாலை சூட்டிச் சென்றனர். பாவாணர்களும், புலவர்களும் வந்து பாமாலையும் சூட்டிச் சிறப்புச் செய்தனர். அவர்களுள் ஒரு புலவர் பெருமாட்டியும் இருந்தார். அவர் மாசாத்தியார் என்னும் பெயரினார். ஒக்கூர் என்னும் ஊரினைச் சேர்ந்த அவ்வம்மையார் ஒக்கூர் மாசாத்தியார் என்று அழைக்கப் பெற்றார். மலையூரிலே நெடுங்காலமாக வாழ்ந்திருந்தார். மறவன் வீரச் சிறப்பு அவர் உள்ளத்தை உருக்கியது. நடுகல்லைத் தாழ்ந்து வணங்கிவிட்டு “நாட்ட பற்றாளன் குடி வாழ்க” என்று வாழ்த்திச் சென்றார்.
66
உ
இதோ பார்! இப்படியடா! இப்படி! இதை இழு! நன்றாக இழு! ஙம்' சரி - குறிபார்த்துக் கொண்டாயா? அடி விற்பயிற்சி யளித்துக் கொண்டிருந்தான் வரிப்புலி. அரியேறுக்கு, ஏழெட்டு ஆண்டுகள் நடந்தேறிவிட்டன. விற்பயிற்சியும், மற்பயிற்சியும் தந்தான் வரிப்புலி, வீரக்குடியிலே பிறந்த அரியேறு போர்க் கலையில் உணர்ச்சி பெற்றான். “தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி" என்பது பழமொழியல்லவா! அம்மொழி பழுதாகி விடவில்லை,அரியேறைப் பொறுத்த அளவில்!
66
'அரியேறு! உனக்கேன் இப்பெயர் வைத்தேன் என்று தெரியுமா?” என்று மங்கை ஒரு நாள் கேட்டாள். “என்னம்மா காரணம்” என்று ஆவலோடு கேட்டான். புலியின் மேல் தனிப் பெருமை கொண்டிருந்தேன் நான். வீரத்திற்கு அதனையே தக்க சான்றாக எண்ணினேன் புலியை வெல்லும் வல்லமைக்கு இணையான வல்லமை இல்லை என்று முடிவு கட்டினேன் உன் அப்பா, தாத்தா பெயர்களும் புலிதானே ஆனால் புலிமீது வைத்திருந்த உயர்வெல்லாம் உயர்வெல்லாம் ஒருநாள் தவி ஒருநாள் தவிடுபொடியாகி
விட்டது.
66
'நீ பிறந்து ஒன்றிரண்டு திங்களுக்குள் நடந்தது அது. வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாமல் காட்டின் பக்கம் போய் வரலாம் என்று போனேன். நம் தினைக்காட்டுக்கே போய் விட்டேன். அங்கே தாத்தா இருந்தார். அப்பொழுது அவர் அங்கே நின்ற ஒரு புலியை எனக்குச் சுட்டிக்காட்டினார். புலி