உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

125

புதருக்குள் மறைந்து நின்று வாலைச் சுழற்றிக்கொண்டு இருந்தது. பக்கத்திலே ஒரு யானை நல்ல தழைகளைக் கொய்து குவித்துக் கொண்டு இருந்தது. அதனைக் கொல்லவேண்டும் என்பது புலியின் எண்ணம் போலும். அதற்கு, மறைந்து நின்று கொல்வதா வழி? வலிமை இருந்தால் நேரடியாகத் தாக்க வேண்டும். சே! சே! புலியின் வீரம் இழிவானது. மறைந்து தாக்க நினைக்கும். இப்புலி மானவீரம் உடையதா?” என்றாள்.

“புலிக் கூட்டத்திற்கே இழிவு” என்றான் அரியேறு. மங்கை அவனை அணைத்துக் கொண்டாள். “அன்றுதான் உனக்கு அரியேறு எனப் பெயர் வைத்தேன். ஆண் சிங்கம் முழங்கிக் கொண்டு வந்து, மலையையே அதிரச் செய்து தானே தாக்கும்” என்றாள்.

66

66

'அம்மா! யானை என்ன ஆயிற்று” என்றான் அரியேறு. மானங்கொண்டு எதிர்த்தது யானை. வெண்ணிறத் தந்தங் களால் குத்திக் குத்திச் சாடியது. துதிக்கையால் தூக்கி எறிந்து, கால்களால் உதைத்தது. புலி ஊக்கமெல்லாம் காட்டி யானையைக் கொன்றுவிடப் பார்த்தது. ஆனால் தக்க 'பிடி’ கிடைக்காத காரணத்தால் மானமிக்க யானைமுன் நிற்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டது” என்றாள்.

"யானைக்குப் பயந்து ஓடவா செய்தது? சண்டையில் செத்திருந்தாலாவது பெருமை. தோற்றோடி உயிரைக் காப்பது இழிவு இல்லையா அம்மா! அவ்வாழ்க்கை என்ன, வாழ்க்கையா? அந்த வேங்கை, தாத்தா வேங்கையை அறிந்து வெட்கப்பட வேண்டும்" என்றான். அரியேறு.

தன் முன்தானைத் துணியால் முகத்தைத் துடைத்துக் காண்டு மறுபக்கம் திரும்பினாள் மங்கை. “என்னம்மா! என்றான். “அந்த வேங்கையைப்போல் என் அரியேறு இருக் காது' என்றாள். “ஆமாம்! அரியேறு பிறந்த மறக்குடியே று அவ்வளவு சிறப்பானது. அவ்வேங்கையைப் போல உயிருக்கு அஞ்சும் உணர்ச்சியே வராது' என்றான். வெட்கத்தால் தலை குனிந்தாள் மங்கை.

அரியேறு சிறுவர்களுடன் விரும்பி விளையாடுவான். அவன் விளையாட்டிலேயே வீரம் புலப்படும். பெரும் பெரும் வீரர்களும் சிறுவர்களின் வீர விளையாட்டைக்கண்டு வியப்புக் காண்ட னர். சமையற்கலை வல்லவளாம் தாய், பிள்ளை சிறுசோறு பொங்குவதைக் கண்டு தன்னை மறந்து வியப்