126
படை
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
வது இல்லையா? விளையாட்டு வீரம் உண்மை வீரத்தின் தோற்றுவாய் தானே!
வரிப்புலி அரியேறுக்கு வீரப்பயிற்சியளித்தான். மங்கை நாட்டுப்பற்று ஊட்டினாள்; குடிச் சிறப்பு எடுத்துரைத்தாள். "பிறந்தோர் அனைவரும் இறப்பது உறுதி; ஆனால் சிறந் தோராக இறப்பது அரிது; என்று ஒரு சமயம் கூறினாள். தாத்தாவை நினைத்துக் கொண்டு நடுகல்லுக்கு மாலையிட்டான் அரியேறு.
வேங்கை மரத்தின் கீழே நின்று வரிப்புலி விற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான். பலகையில் இருந்த துளையைப் பார்த்து அடித்துக் கொள்வதிலே தனி ஆசை. குறிதவறாமல் அடிப்பது மகிழ்ச்சிதானே. பக்கத்தில் இருந்த நெல்லிமரத்தில் ஒருகாயைச் சுட்டிக் காட்டினான் அரியேறு. அக்காயையே வீழ்த்தினான் வரிப்புலி. துவர்ப்பான நெல்லிக் காயும் இனித்தது. குறிப்புப்படி வீழ்ந்தது அல்லவா!
66
66
அப்பா! இப்பலகை மிகப்பக்கத்தில் இருக்கிறது. என் கையில் எடுத்துக் கொடுங்கள். தொலைதூரத்தில் நின்று பிடித்துக் கொள்கிறேன். அம்பைத் துளையின் வழி செலுத் துங்கள்! இந்த அளவை மட்டும் பயிற்சி செய்து பயனில்லை” என்றான். ஆமாம்! அதுசரி நீ பிடித்திருந்தால் என் குறி பலகையில் படாமல் உன் மேல் பட்டுவிட்டால்" என்றான். உங்கள் அம்புக் குறிமேல் எனக்கு ஐயமே வருவதில்லை. மேலே பட்டாலும் படட்டும்! அது எப்படியும் முதுகில் படாது அல்லவா" என்றான் “நீ புலியல்லடா! அரியேறு” என்று தட்டிக்கொடுத்தான் வரிப்புலி. அப்படியே பயிற்சி செய்தார்கள். அரியேறும் அம்புவிடக் கற்றுக்கொண்டான். அவனது வில் வளைப்பையும், அம்பு செலுத்துதலையும் கண்டு வரிப்புலி மெய் மறந்து நிற்பான். அவ்வளவு திறமை வந்துவிட்டது அரியேறுக்கு.
ஒரு பெருங்கூட்டத்தார் வேங்கை மலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களையெல்லாம் திரட்டினர். தினைக் காட்டிலே வரிப்புலி இருந்தான், பசு மேய்ப்பவர்கள் சிதறி யோடினர். மனஞ்செருக்கி வந்தவர்கள் மாடுகளைத் திரட்டிக் கொண்டு சென்றனர். பசுக்காரர் சிலர் மன்னனிடம் உரைக்க ஓடினர். பக்கத்து ஊரில் சொல்லவும் விரைந்தனர்.
படைக்கருவி எதுவும் இல்லாமல் தினைக் காட்டிற்கு வந்த வரிப்புலிக்கு இந்நிகழ்ச்சி கோபத்தை எழுப்பியது. விரைவாக