130
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
ருக்கும் இவனையும் போருக்கு அனுப்புகிறாள். போருக்கு அனுப்பிவைப்பதிலேதான் எவ்வளவு மகிழ்ச்சி வீதியிலே நின்ற மகனை அழைத்து வைத்து அழகு வகையெல்லாம் செய்து வேல் தந்து வெற்றியோடு வா” என்று வாழ்த்தி அனுப்பும் இவள் மறக்குடி மங்கை என்பது தகும். மிகத் தகும்,” என்று புலம்பினார் மாசாத்தியார். புலவர் பெருமாட்டியின் புலம்பல் வெறுமனே போய் விடவில்லை. மறக்குடியின் சிறப்புக்கு ஏற்ற ஒரு பாமாலை யாகி விட்டது.
போருக்குச் சென்ற அரியேறு நெடுநேரம் வீட்டுக்குத் திரும்பவில்லை. பொழுது போய்விட்டது. வீரர் அனைவரும் வீடு திரும்பி விட்டனர். அவனைப் பற்றிய செய்தி ஒன்றும் மங்கைக்குத் தெரியவரவில்லை. விரைந்து போர்க்களம் சென்றாள். பிணக்குவியல்களை நாயும் நரியும் இழுத்துக் கொண்டிருந்தன. கழுகும் காக்கையும் குத்திக் குடைந்து கொண்டிருந்தன. அரியேறு களத்தின் இடையே தலையில் கைகளை வைத்துக் கொண்டு கவலையுடன் உட்கார்ந்திருந்தான்.
அரியேறு தனித்திருப்பதைக் கண்ட மங்கை “ஏனடா! வீட்டுக்கு வரவில்லை' என்றாள். “வர மாட்டேன் அம்மா! வரமாட்டேன். எந்த முகத்துடன் வீட்டுக்குத் திரும்புவேன். தாத்தா போருக்குப் போனார் திரும்பி வரவில்லை. அப்பா போருக்குப் போனார் திரும்பிவரவில்லை. அவர்களெல்லாம் வீரப்போர் செய்து நாட்டுக்காக இறந்தார்கள், “என்று சொன்னாய். நான் மட்டும் என்ன கோழையா, தாத்தாவும் அப்பாவும் என்ன நினைப்பார்கள்? ஒரு காயமும் இல்லாமல் இப்படியே வந்தால் நீதான் என்ன நினைப்பாய்? எங்கோ பயந்து போய்க்கிடந்து வந்திருக்கிறேன் என்றுதானே நினைப்பாய்;
6
நான் மார்பில் புண் இல்லாமல் வருவது உனக்குப் பெருமையா? நம் குடிக்குப் பெருமையா? இல்லை - எனக்குத் தான் பெருமையா? அதனால் தான் வீட்டுக்கு வரவெட்கமாக ருக்கிறது. நான் இங்கு வந்து அம்பு தொடுத்தேன். ஐந்தாறு தான் தொடுத்தேன். ஆனால் அதற்குள் ‘வெற்றி வெற்றி” என்று வீரர்கள் போய்விட்டார்கள், நமக்குத்தான் வெற்றியாம். சாவாமல் காயம் படாமல் எப்படித்தான் வெற்றி கிடைத்ததோ? கோழைகள்' என்று மூச்சுவிடாமல் பேசினான்.
வீரமங்கை ஓயாமல் அழுதாள். "இப் பேச்சை வேங்கை ருந்து கேட்கவேண்டும்; புலி இருந்து கேட்கவேண்டும். நான் இருந்து கேட்கிறேன்” என்று விம்மி விம்மி அழுதாள்.