உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

129

மெழுகப்பட்டது. அவளோ வரிப் புலியின் வில்லை ஊன்றி வைத்து, இரண்டு மாலைகளை அதில் சூட்டியிருந்தாள்! வீரத்தின் பரிசு....!

மறுநாள் காலையிலும் மங்கையின் வீட்டுக்குச் சிலர் வந்தனர். சிலர் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஒக்கூர் மாசாத்தியார் உள்ளத்தை மறவன் செயலே பறித்திருந்தது. வரிப் புலியின் செயலோ உருக்கியேவிட்டது. தேறுதல் சொல்ல வந்த அவ்வம்மையார் அனலிடைப் பட்ட புழுவெனத் துடித்தார். கண்ணீர் வடித்தார். மங்கைதான் அவ்வம்மையாரைத் தேற்றிக் கொண்டிருந்தாள். மங்கையின் உள்ள நிலையும், துணிவும் மாசாத்தியாரை, வியப்பில் ஆழ்த்தின, மறக்குடியின் மாண்பைப் பலபட எண்ணிக் கொண்டிருந்தார்.

அப்பொழுதிலே தெருவில் போர்ப்பறை முழங்கியது. அம்முழக்கம் மாசாத்தியாரைத் திகைக்கச் செய்தது. மறக்குடி வீரர்களோ வில்லை விட்டுக் கிளம்பும் அம்பு போலவும், குகையை விட்டு வெளியேறும் வேங்கை போலவும் கிளம்பிக் கொண்டு இருந்தனர்.

மங்கையும் பொங்கும் சினத்துடன் எழுந்தாள். “போர்ப் பறையா அது?” என்று துடி துடித்துக் கேட்டாள்; வீதிப்புறத்தே நின்றிருந்த அரியேற்றை ஓடிப்போய் அழைத்தாள்; நன்னீ ராட்டினாள்; வெண்பட்டு உடுத்தாள்; மயிரைக் கோதிக்கட்டிப் பூமுடித்தாள். கிண்கிணி இலங்கும் கால்களிலே வீரக்கழலைச் செறித்தாள். வளையல் விளங்கும் முன்கைகளிலும், வ பிலும் கச்சைகளைக் கட்டினாள். வேலும் கேடயமும் விருப் புடன் தந்தாள். “போய் வாடா மகனே போருக்கு; மறக்குடியின் மாண்பை நிலை நாட்டு.

இடுப்

எங்களுக்கு மானம் பெரிதே ஒழிய உயிர் பெரிதில்லை; மாற்றான் காலடி எங்கள் தாயகத்து மண்ணிலே பட விட மாட்டோம் என்று கிளம்பு; வெற்றியோடு திரும்பி வாடா! என் வீரச் செல்வா!" என்று அனுப்பி வைத்தாள். அரியேறு சிங்க மெனச் செம்மாந்து போர்க்களம் சென்றான்.

“ஒழிக உள்ளம்; ஒழிக உள்ளம். இவள் துணிவு கொடிது; மிகக் கொடிது. இச் சிறுவயதிலேயே வேலும் கையுமாய்ப் போர்க்களம் புகவிடும் இவள் கொடியவள்; முன்னாள் போரிலே மாண்டான் தந்தை; நேற்றைப் போரிலே இறந்தான் கணவன்; ன்று பறையொலி கேட்டவுடன் தன்குடிக்கு ஒரே மகனாக