128
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
உரங்கொண்ட இருபடைகளும் எளிதில் சலித்து விட வில்லை. காலைப் பொழுதிலே தொடங்கிய போர், உச்சிப் பொழுதுவரை ஓய்ந்து விடவில்லை. வீரர்கள் பள்ளத்தாக்கிலே நின்று போரிட்ட பொழுது, பகைவர்களில் சிலர் மறைவாக மலை மீது ஏறிப் பாறைக் கற்களைப் புரட்டிப் புரட்டித் தள்ளினர். அவர்கள் வஞ்சகச் செயலைக் கண்டு தலைக்குக் குறிபார்த்து அம்பு ஏவினான் வரிப்புலி. ஒருவர் இருவர் தப்பிச் செல்ல நினைத்தனர். அவர்களையும், ஓடாதவாறு குறி வைத்தான்.
மலையின் உச்சியில் இருந்த அவர்கள் மரம் ஒன்றில் மறைவாக இருந்து, எப்பக்கத்திலிருந்து அம்பு வருகிறது என்று புரிந்து கொள்ள முடியாத அளவில் அம்பு ஏவினர். வரிப் புலியும் சோர்வு கொள்ளாது அம்புகளை நூறு, ஆயிரம், என்று தள்ளிக் கொண்டு இருந்தான். பலர் உருண்டனர்; பலர் ஓடினர்; பலர் வீழ்ந்தனர்; சிலர் உரங்கொண்டு எதிர்த்துத் தாக்கினர்;
வாள்கள் சுழன்றன. வில்களும் அம்புகளும் விளையாடின. வரிப்புலியின் வில் பேசியது. நாண் பாடியது; அம்பு வீரக் கூத்தாடியது. அவன் உடலில் இடமில்லாமல் ஏற்பட்டிருந்த புண்களில் இருந்து குருதி எழுந்தது. சோர்ந்து விடவில்லை தாக்குதல் உச்ச நிலைக்கு வந்தது. பகைவர் ஓட்டம் பிடித்தனர். அவர்கள் ஓடிய பின்தான் தன் உடல் நிலையை உணர்ந்து பார்த்தான் வரிப் புலி. அப்பொழுது அவனால் நிற்கக் கூட முடியவில்லை. சோர்ந்து வீழ்ந்தான்.
வ்வில்லையும் அம்பையும் அரியேறிடம் கொடுங்கள்; குருதி படிந்த இம்மாலையை மங்கையினிடம் கொடுங்கள்; “நாட்டுப் பற்றால் உயிர் விட்டேன்” என்று நாடாள்வோனுக்கு உரையுங்கள் என்று பேச்சை முடித்துக் கொண்டான். மன்னவன் புகழ வாழ்ந்த மானவாழ்வு மண்ணில் சாய்ந்தது. ஆனால் மாயாப்புகழ் பெற்று விட்டது.
வரிப்புலியின் செய்தியை மங்கை அறிந்தாள். வாய் பேச எழவில்லை; தொண்டை கப்பிக்கொண்டது; ஏங்கினாள்; உள்ளம் வீங்கினாள்; ஆனால் எரிமலைபோல் அடங்கிக் கிடந்தாள்; உள்ளத்தின் குமுறல் என்னென்னவோ?
ஊரெங்கும் பரவியது செய்தி. மறவன் இறப்பே ஈடு செய்ய இயலா இழப்பு. வரிப்புலியும் சேர்ந்துகொண்டான். அவனைப்பற்றிக் கேட்டுச்செல்ல மலையூர் மட்டுமன்று. பக்கத் தூர்களெல்லாம் திரண்டன. மங்கையின் வீடு கண்ணீரால்