உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

137

"டேய் வந்து பார்" என்று சொல்லிக் கொண்டே வெறி பிடித்தவன் போல் சாத்தன் மீது பாய்ந்தான் அழிசி! பூதனும் முன்னும் பின்னும் நின்று நையப் புடைத்தான். சாத்தன் சிறிது நேரம் பொறுத்திருந்தான்.

இனிப் பொறுத்துப் பயனில்லை என்று சீறி எழுந்தான்; புலிப் பாய்ச்சல் பாய்ந்து இருவரையும் நொடிப் பொழுதில் கீழே உருட்டினான். இரண்டு பேருக்கும் பொறுக்கமுடியாத அளவுக்கு அடி.. குத்து! அழிசி வாயிலிருந்து குருதி கொப்பளித்துக் கொண்டு வந்தது. பூதனும் அழிசியும் சோர்ந்துபோய் விட்டனர்.

சண்டை ஓரளவு ஓய்ந்தது. வாய்ச் சண்டையில் கிளம்பி விட்டனர் நண்பர் இருவரும்! தோற்று ஓடும் நாய் வாலை மடக்கிக் கால்களுக்குள் வைத்துக்கொண்டு குரைப்பது இல்லையா! சாத்தன் பேசவில்லை. தன் வண்டியைத் தூக்கினான். பூதன் வண்டியின் மீது ஒரு போடு போட்டான்; பூதன் வண்டி நொறுங்கியது பின் தன் வண்டியையும் நொறுக்கினான்.

"கொடுமைக்குக் கூட்டுச் சேர்ந்துள்ள உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு நகர்ந்தான் சாத்தன். "வொவ் வொவ்வோ" என்று அழுத்தம்” காட்டினான் பூதன். அழிசி வாயிலிருந்து இரத்தம் வந்து கொண்டு இருந்தது. இல்லாவிடில் அவனும் அழுத்தம் காட்டியிருப்பான்.

சாத்தன் வீட்டுக்குச் சென்றான். அவனுக்குப் பூதன் மேலும், அழிசி மேலும் சினம் தான். இருந்தாலும் அதைப் பெரிது பண்ணி பெற்றோர்களிடம் கூறுவதற்கு அவன் விரும்பவில்லை. அறிந்தோ, அறியாமலோ தவறு செய்து விட்டார்கள். அதன் பயனையும் அள்ளிக் கட்டிக் கொண்டார்கள். இன்னும் அதையேன் ஊரெல்லாம் பரப்பவேண்டும் என்று அடக்கமாக இருந்தான்.

ஆனால் அழிசிக்கும் பூதனுக்கும் வெட்கம் வெட்கமாக இருந்தது. எப்படியும் சாத்தன் தங்களை இழிவாக ஊரெல்லாம் தூற்றித் திரிவான் என்றே எண்ணினர். இரண்டு மூன்று நாள்கள் ஊருக்குள் நடமாடு வதையேவிட்டு ஒளிந்து திரிந்தனர்.

சாத்தனது தந்தையார் பெயர் ‘ஒல்லையூர் கிழார்' என்பது. அவர் ஒல்லையூரிலே இருந்த பெருஞ்செல்வரான படியாலும், உழவுத்தொழில் புரியும் குடியிலே பிறந்ததாலும் ‘ஒல்லையூர் கிழார்' என்று அழைக்கப்பெற்றார்.

கிழார் என்று சுருக்கமாக அழைத்தாலும் அவரையே குறிக்கும் அளவுக்கு எல்லோருக்கும் தெரிந்த பெரிய மனிதராக