உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம்

5

அவர் இருந்தார். அவருக்குச் சாத்தன் மேல் அளவு கடந்த அன்பு உண்டு. அதனால் கண்ணே பொன்னே என்று போற்றி வளர்த்தார்.

உடல் வளர்ந்தால் மட்டும் போதுமா? "அறிவும் வளர வேண்டும்; பண்பும் வளர வேண்டும்” என்று நினைத்துத் தக்க ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைத்தார்.

ஆசிரியர் நல்லறிவும் பெருங்குணமும் ஒருங்கே கொண்டவர். அதனால் சாத்தனை மிகவும் அன்பாக நடத்தி அறிவைப் பெருக்கினார். அவ்வப்பொழுது ஏற்படக்கூடிய ஐயங்களை மிகத் தெளிவாக விளக்கினார். உலாவப் போகும் பொழுதும் சிறுவன் சாத்தனை அழைத்துக் கொண்டு போவது உண்டு.

அப்பொழுது அருமை அருமையான பாடல்களைப் பாடி மகிழ்விப்பார். பழைய இலக்கியங்களை எடுத்துக்காட்டி விளக்குவார். பாடல்களை இசையோடு பாடுவார். சாத்தனை யும் பாடச் செய்வார். அதனால் சாத்தனுக்கு ஆசிரியர் மீது வாஞ்சை உண்டாயிற்று.

ஒருநாள் ஆசிரியர் சாத்தன் வீட்டுக்கு வந்தார். அப் பொழுது கிழார் இருந்தார். சாத்தன் வீட்டில் இல்லை. கொல்லைப் புறத்தில் கையில் ஒரு குடத்துடன் நின்றுகொண்டிருந்தான். கிழார் ஆசிரியரை அழைத்துக்கொண்டு சாத்தன் பக்கத்திலே சென்றார். சாத்தன் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்தினான்; பணிவுடன் நின்றான்.

கிழார், 'ஐயா, இதோ பாருங்கள்" என்று முல்லைப் பந்தலைச் சுட்டிக் காட்டினார். இங்கே வேலையாட்கள் உண்டு. இருந்தாலும் அவர்கள் இம்முல்லைப் பதியனுக்கு நீர் வார்ப்பதோ, களை பறிப்பதோ செய்வதில்லை. சாத்தன் அவர்களை இப்பந்தல் அருகில் போகவும் விடுவதில்லை “நானே செய்கிறேன்' என்று வரிந்துகட்டிக் கொண்டு வேலைபார்க் கிறான்” என்றார்.

66

அப்படியா! நல்லது! மிகவும் மகிழ்ச்சி! என்று கூறிக் கொண்டு சாத்தனை அன்பால் தட்டித் தந்தார். “சாத்தா! உனக்கு எப்படி இம்முல்லைக் கொடியின் மீது பற்று ஏற்பட்டது? என்று வினவினார்.

"ஐயா, எப்படிப் பற்று ஏற்பட்டது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இம் மலரும் இதன் மணமும் என்னை மிகக் கவர்ந்திருப்பது மட்டும் உண்மை. எனக்கு இளமைப்