உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம்

5

குளக்

கரையையும் பொருட்

பலபடிகளைக் கொண்

படுத்தாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்தார்.

கிழவர் வருகையைச் சாத்தன் உற்று நோக்கினான், அவர் ஏன் நெடுநேரமாகத் தங்களைக் கூர்ந்து பார்க்கிறார் என்று எண்ணினான். அப்பொழுது கிழவர் ஒரு படியிலிருந்து மற் றொரு படிக்குக் கம்பினைத் தூக்கி வைத்துக் காலையும் எடுத்து வைக்க முயன்றார். அதற்குள் இருமல் வந்துவிட்டது. தளர்ந்துபோய் அடியெடுத்து வக்க முடியாதவராய் உட்கார்ந்து கொண்டார்.

சாத்தன் நெருங்கினான். “பெரியவரே! நீங்கள் எங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ஏன்? இந்தத் தள்ளாட்டத்துடன் இப்படியில் ஏன் இறங்கவேண்டும்?” என்றான். இளைஞனே! உங்கள்

66

ளமை விளையாட்டைப்

பார்க்கப் பார்க்க இன்பமாக இருக்கிறது. இது என் இளமை விளையாட்டையெல்லாம் கண் முன்னே நிறுத்திக் காட்டு கின்றது. அதனால் தான் உங்களையே பார்க்கிறேன்” என்றார் கிழவர்.

66

ஓ ஓ! எங்கள் விளையாட்டு உங்கள் இளமை விளையாட்டை நினைவு படுத்துகின்றதா? அதை எங்களுக்குச் சொல்லுகிறீர்களா? கேட்க ஆசையாக இருக்கிறது” என்றான் சாத்தன். இதற்குள் இளைஞர் இருவர் மூவராக வந்து கூடி விட்டனர்.

66

இப்பொழுது பழைய கதையை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. இளமையிலே என்னென்ன விளை யாட்டுக்கள் விளையாடினேன். அந்தப் பருவம் இனியும் வரவோ செய்யும்?" என்றார்.

"தாத்தா! அதனை ஒழிவின்றிக் கூறவேண்டும்" என்று வற்புறுத்தினான் சாத்தன்.

66

·

'இப்பொழுது கால்கள் வலுவற்று விட்ட படியால் தண்டு ஊன்ற வேண்டியிருக்கிறது. தண்டூன்றிக் கொண்டாலும் தளர்ச்சி போய்விடவில்லை. நடுக்கம் ஏற்படுகிறது, அதற்கு மேலும் வாட்டுவதற்கென்று இருமல் இருக்கிறது. சிறிது பேசு வதற்கும் இயலாத நாத் தளர்வும், நரை திரை சேர்ந்து வாட்டும் மூப்பும் கூடி விட்டன. ஆனால் இளமையிலே... என்று நிறுத்தினார்

பெரியவர்.