66
புறநானூற்றுக் கதைகள்
143
ளமையிலே.....” என்று வினாவிப் பேசுமாறு தூண்டி
னான் சாத்தன்.
66
இளமையிலே ஆற்றங்கரைக்குச் செல்வேன், மணலிலே விரும்பிப் புரள்வேன்; என்னொத்த சிறுவர், சிறுமியர்களுடன் சிறுவர்,சிறுமியர்களு சேர்ந்து விளையாடுவேன். மணலைத் திரட்டிவைத்துப் ‘பாவை’ யாக்குவேன். கண்ட கண்ட பூக்களைப் பறித்து, மனம்போல் மாலையாகத் தொடுத்துக் கட்டி, பாவைக்குச் சூட்டுவேன். அதன் அழகிலும், என் கைத் திறத்திலும் உள்ளம் இழந்து உவகையுடன் பார்த்துக்கொண்டே நிற்பேன்” இதற்குள் கிழவருக்கு இருமல் வந்துவிட்டது. இடையே சிறிது நேரம் நிறுத்தினார், இருமல் ஓய்ந்தது; “அதற்குப் பின்” என்று தூண்டி னான் சாத்தன்.
66
‘ஆற்றங் கரையின் பக்கம் ஒரு குளம் உண்டு; அதன் நீர் மிகவும் தண்மையானது; பளிங்குபோல் தெளிவானது; அங்கு ஆண்களும் பெண்களும் சேர்ந்து நீராடுவது உண்டு; நானும் அங்கு நீராடும் பெண்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக நீராடு வேன், அவர்கள் தொட்டு விளையாடும் பொழுது நானும் தொட்டு விளையாடுவேன். அவர்கள் வளைந்து வளைந்து ஓடும் பொழுது நானும் ஓடுவேன். அக்காட்சியை இன்று நினைத் தாலும் வேடிக்கையாக இருக்கிறது. அறியாப் பருவத்துச் செயல்" பெரியவர் நா வறண்டு விட்டது. பேச இயலவில்லை. சாத்தன் ஒருவனைத் தண்ணீர் கொண்டு வருமாறு ஏவினான். தண்ணீர் வந்ததும் பருகினார் பெரியவர். தண்ணீர் குடிப்ப தற்குக் கூட அல்லல்படும் முதுமையை நினைத்து வருந்தினான் சாத்தன்; குளித்துக் கொண்டு இருந்த இளைஞர்கள் அனைவரும் ஒருவர் இருவராய் வந்து சூழ்ந்து கொண்டனர்.
“பிறகு” என்று பேச்சைக் கிளறினான் சாத்தன். “கேள்! உன் பெயர் சாத்தன் தானே! கிழாரது மகன் தானே” என்றார். "எப்படி அறிந்து கொண்டீர்கள். நான் உங்களை இதற்கு முன் பார்த்ததே இல்லையே” ஆவலோடு கேட்டான் சாத்தன். “நான் கிழாரை முன்பே அறிவேன்.' உன்முகம் காட்டுகிறதே இன்னார் மகன் என்று. கிழாருக்கு மகன் ஒருவன் உள்ளான் என்பதையும், அவன் பெயர் சாத்தன் என்பதையும் பலர் சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன்” என்றார்.
“மிகவும் மகிழ்ச்சி! உங்கள் இளமைக் கதையை அரை குறை இல்லாமல் கேட்க வேண்டும்போல் இருக்கிறது” என்றான்.