உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

147

சளைக்காத ஒருவன் புலிபோன்று பாய்ந்து வந்து முன்னின்றான். அவனைச் சார்ந்தவர்கள் புலியை வாலுருவி விடுவதுபோல் தழுவிக் கொடுத்து ஊக்கப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

66

“முதலில் வாட்போர்” என்றான் வந்தவன். “சரி; எடுத்துக் கொள்” என்றான் சாத்தன், போர் தொடங்கியது. சுறா மீன்கள் பிறழ்வது போன்று சுழன்றன வாள்கள்; மின் வெட்டுப் போல் கதிரொளிபட்டுத் துலங்கின; இமைத்த கண் மூடாமல் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். நண்பர்கள் ஆட்டத்திலே ஒன்றிப் போய் மெய் மறந்து போயினர். பெரியவர்கள் யாது நேருமோ என்று திகைத்து நின்றனர். வாள் வீச்சு முடிந்தது, சாத்தனே எ வெற்றி கொண்டான். ஆரவாரத்தால் காதுகள் செவிடு பட்டன! தோற்றவன் வெட்கப்பட்டுத் தலை குனிந்து வெளியேறினான்.

கம்பு சுழற்றலுக்கு ஒருவன் வந்தான்; விரைவில் தோல்வி கண்டான்; அதன் பின்பு விற்போர், வேற்போர், மற்போர் தொடர்ந்து நடைபெற்றன, சாத்தனே வெற்றி கண்டான், தான் ஒருவனாக நின்று வந்த வீரர்களை வென்றது பெருஞ் சிறப்பாக இருந்தது. அதிலும், மற்போருக்கு வந்தவன் மண்ணில் உருண்ட போது சாத்தனே துடைத்துவிட்டுத் தூக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது வெற்றிக்கு முடி மணியாகத் திகழ்ந்தது.

சாத்தனை ஒரு மேடைமீது ஏற்றிவைத்து மாலைகளாலே மறைத்துவிட்டனர்! அவ்வளவு மகிழ்ச்சி மக்களுக்கு, குப்பிகளில் பனிநீரையும், மணக் கலவையையும் கொண்டு தெளித்து அத

லேயே நீராட்டினர். அவனைத் தூக்கிக் கொண்டு ஆடினர். தங்கள் தங்கள் தோளிலே கிடந்த துண்டுகளை எடுத்து வீசி எறிந்து காற்றிலே பறக்கவிட்டுக் களிப்புற்றனர். 'சாத்தன் வாழ்க! வீரன் வாழ்க! ஒல்லையூர் ஓங்குக” என்று வாழ்த்தினர். எதிர்த்துத் தாக்கியவர்களோ இங்கொருவரும் அங்கொருவருமாக ஒருவருக் கொருவர் தெரியாமல் ஒளிந்துகொண்டு போயினர். அவர் களுக்குத் துணையாக இருந்து ஊக்கப்படுத்திய வீரர்கள் தலை கவிழ்ந்து ஓடினர். கீரத்தனார்க்கு ஒல்லையூர் நிகழ்ச்சி வியப்பாக இருந்தது.”ஏன்” என்பது புரியவில்லை. போர் நிகழ்ச்சியிலே உள்ளம் ஒன்றிப் போய் நின்ற அவர் ஒரு பெரியவரிடம் கேட்டார் 'ஐயா, இங்கே போர் செய்தார்களே ஏன்?’

“அதுவா? அது ஒரு பெரிய கதை! உட்கார்ந்துகொண்டு பேசுவோம்” என்று ஒரு திண்ணையைச் சுட்டிக் காட்டி அங்கு அழைத்துச் சென்றார். இருவரும் திண்ணையிலே இருந்து கொண்டு பேசத் தொடங்கினர்.