148
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
“சண்டைகளில் வென்றானே ஒரு வீரன் அவன் பெயர் சாத்தன்; இன்று அவன் செய்த போர் அவனுக்காக இல்லை; ஊருக்காக. ஊருக்கு ஏற்பட்ட போரைத்தான் அவனே பொறுப் பேற்றுக் கொண்டு நடத்தினான்.”
66
66
அப்படி என்றால்" என்றார் கீரத்தனார்.
‘அடுத்துள்ள ஊர் ‘மங்கலம்' என்பது, அவ்வூர் மாடுகள் இங்குள்ள மேய்ச்சல் நிலத்திற்கு வந்திருந்தன. தானே வளர்ந்த புல்லை மேய்ந்து வானம் பொழிந்த நீரைக் குடித்துச் சென்றால் யாருக்கும் கேடா? அதனால் தடுப்பார் இல்லாமல் நாள் தோறும் மேய்த்துச் சென்றனர். ஆனால் விட்டுக்கொடுத்த உரிமையைத் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை அவர்களுக்கு. அதனால் மனம் போனபடி விளை நிலங்களிலும் பசுக்களைவிட்டு மேய்த்துக் கெடுக்கலாயினர்.
66
அழிசி என்பவன் ஒருவன்; அவன் மிக ஏழை. அவன் வயலிலே கதிர் ஈனும் அளவில் இருந்த நெற்பயிரை அழித்து விட்டனர். தன் வயல் அழிக்கப்படுவதை அறிந்து அழிசி ஓடிப் போய் மாடுகளை வெருட்டியிருக்கிறான், மேய்ப்பவர்களையும் திட்டியிருக்கிறான். ஆத்திரத்தால் வயல்காரன் பேசினால், மன்னிப்புக் கேட்டிருக்கவேண்டும். அழிபாட்டுக்கு வழி செய் திருக்கவேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு, அழிசியைத் திட்டி அடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ‘நாம் பலர்; இவன் ஒருவன்' என்று எண்ணி இறுமாப்புடன் செய்து விட்டார்கள்போல் இருக்கிறது. ஊருக்கு நெடுந்தொலைவில் வயல் இருந்த காரணத்தால் யாருக்கும் இந்த நிகழ்ச்சி தெரியாது. அழிசி நெடுநேரம் மயங்கிப்போய்க் கிடந்துவிட்டு, பின் எப்படியோ தன் உணர்வு வர வீட்டுக்குத் தள்ளாடித் தள்ளாடி வந்திருக்கிறான். அவன் வந்து நடந்ததைக் கூறியவுடனே இளைஞர் அனைவரும் கொதித்து எழுந்தனர். சுற்றத்தார் அனைவரும் துடிதுடித்துக் கொண்டு கிளம்பி “சுட்டு எரிப்போம் அவர்கள் ஊரை” என்று திரண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாகி விட்டது. எப்படியோ அமைதி உண்டாக்கினோம். இன்றும் மேய்ச்சலுக்கு மாடுகள் வரவே செய்யும்; அவற்றைத் திரட்டிக்கொண்டு ஊருக்கு வந்துவிடுவோம். அவர்கள், குற்றத்தை ஒப்புக் காண்டு மன்னிப்புக் கேட்குமாறு செய்வோம். அது முடியவில்லை என்றால் அதற்குப் பின்பு ஊரை வளைப்போம்” என்று உறுதி செய்தோம்.
66
66
வ