புறநானூற்றுக் கதைகள்
149
“நாங்கள் நினைத்ததுபோலவே மறுநாளும் பசுக்கள் மேய்ச்சலுக்கு வந்தன. ஏதேனும் தகராறு வரக்கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கும் ஏற்பட்டிருந்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் கருவிகளுடன் வந்திருந்தனர்.
"நாங்கள் போய் மாடுகளைத் திரட்ட அவர்கள் மீட்க, ஒரே ரே கலவரம் ஆகிவிட்டது. ஆனால் இங்கிருந்து போனவர் களோ மிகப்பலர்! அவர்கள் தகராறு வரும் என்று நினைத் திருந்தாலும் கூட இவ்வளவு பெரிதாக ஆகிவிடும் என நினைக்க வில்லை. அதனால் ஓட்டம் பிடித்தனர். பசுக்களைத் திரட்டிக் கொண்டு வந்துவிட்டோம்,
க
‘மங்கலத்தார் சிலர் வந்து மன்னிப்புக் கேட்டு மாடுகளைக் கொண்டு சென்றிருக்கலாம். அவர்களுக்கு அது பெருமைக் குறைவாகத் தோன்றிவிட்டதுபோல் இருக்கிறது. அதனால் 'வலிமையாலே பெறவேண்டும்” என்று கருதிக் கொண்டு ஊரை வளைத்துக்கொண்டனர். யாரும் வெளியே போகவோ வரவோ முடியாது என்ற அளவில் சூழ்ந்து கொண்டனர். இன்னும் சும்மா இருக்கமுடியுமா?
"நாங்களும் திரண்டோம்; ‘அழிவுக் காலம் அவர்களுக்கு வந்துவிட்டது; இல்லையேல் இவ்வளவு அறிவில்லாமல் நடந்து கொள்ளமாட்டார்கள்' என்ற ஏக்கம் முதியவர்களுக்கு இருந்தது. இளைஞர்களோ இரைவிரும்பிச் செல்லும் புலிபோல் தாக்குவ தற்குக் கிளம்பினர். இரண்டு ஊரார்களும் நேருக்குநேர் தாக்க முனைந்து விட்டோம். அப்பொழுது சாத்தன் ஓடிவந்து போரைத் தொடங்காதவாறு தடுத்தான்.
“போர் வேட்கையிலே கிளம்பியுள்ள வீரர்களே! பொறுங்கள்' என்று கையமைத்துக் காட்டி, ஒரு மேடான இடத்தில் நின்றான். நீங்கள் உண்மையான வீரர்களாக இருந் தால் - மான வீரர்களாக இருந்தால் - நான் சொல்வதைக் கேட்டு, அதன் பின் உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்' என்றான்.
டு
"தொடக்க முதல் தவறுகள் செய்துவிட்டு, இன்னும் தவற்றை உணராது ஊர்விட்டு ஊர்வந்து தாக்க முனைந்து நிற்பதுதான் உங்கள் நேர்மையோ? நேர்மையான வீரன் மற் றொரு நேர்மையான வீரனுக்கு மதிப்புக் கொடுத்தே தீர்வான். உங்களை எதிர்த்து வெற்றி கொள்ளத் தக்க வீரர் இந்த ஊரிலே இல்லை என்பது உங்கள் எண்ணமா? அப்படி எண்ணினால் நீங்கள் பழியடைவது உறுதி.