உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

!

159

ஊருக்கு மிகவும் நெருக்கமாக ஒரு கழுதை நின்றது. அதன் மீது பொதிச் சுமை ஒன்றும் இல்லை. இருந்தாலும், நிற்கவே திண்டாடியது. நல்ல வேளையிலேயே கால் தட்டும் கழுதை ஒட்டி உலர்ந்து போன இவ்வேளையில் நடக்க முடியுமா? முட்டி தட்டித் தட்டிப் புண்பட்டுப் போய்க் கிடந்தது. கழிவுப் பொருள்கள் குப்பை, கூளங்கள் ஏதாவது கிடக்கின்றனவா என்று தேடித் திரிந்தது.

ஊரின் பெயர் குடகூர் என்பது. ஊரின் கடைசியிலே ஒரு வீடு இருந்தது; வீட்டுச் சுவர் நிழலிலே ஒரு நாய் படுத்துக் கிடந்தது. அது தன் கண்ணைத் திறக்க முடியாத அளவில் மயங்கிப் போய்க் கிடந்தது. ஊடே ஊடே உறுமிக் கொண்டது. அது ஐந்தாறு குட்டிகள் போட்ட நாய்! குட்டிகள் மேலே விழுந்து புரண்டன. கண் திறவாத அக்குட்டிகள் தாயின் மடுவில் வாய் வைத்துச் சுவைத்துச் சுவைத்து இழுத்தன. நாயும் உருண்டு பார்த்தது முடியவில்லை. குட்டிகளை விட்டுவிட்டு ஓடவும் தாயன்பு விடவில்லை. இரத்தம் வெளி வரும் அளவுக்கும் குட்டிகள் கடித்து இழுத்துக்கொண்டே இருந்தன. நாயின் மடுவில் யாரும் பாலைக் கறந்து கொண்டார்களா? கறக்க முடியுமா? நாய்க்குட்டி அன்றிப் பிறிதெதனாலும் கறக்கப்படாத நிலையுடைய நாய்க்கே இத்துயர் நிலைமை என்றால் அவ்வூர் வறுமைத் துயரை எப்படிச் சொல்வது?

பசு, எருமை, கழுதை, நாய் இவற்றை நோக்கிக் கொண்டே வந்தார் ஒரு கிழவர். அவருக்கு வயது அறுபதைத் தொட்டு இருக்கும். ஒன்றிரண்டாய் நரைத்த தலை; அடர்ந்த மயிர்; பரந்த நெற்றி; நிறைந்த சுருக்கங்கள். கன்னத்திலே சில முதுமைக் கோடுகள்; சற்று நீண்ட மூக்கு; ஒளியூட்டும் கண்கள்; கறை படாத பல் வரிசை; முகத்திற்குத் தனியழகு ஊட்டும் தாடி அதிலும் ஒன்று இரண்டாய் நரை; நீண்ட கைகள்; அளவிட்டு நடக்கும் கால்கள்; ஆழ்ந்த சிந்தனை - நடந்து வந்த கிழவரின் பொதுவான அடையாளங்கள்!

கிழவர், நாய் படுத்துக் கிடந்த வீட்டை நோக்கினார். அதன் கதவு தாழ் போடப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டினுள் ஆரவாரம்’ பலமாக இருந்தது. திறந்து கிடந்த சாளரத்தின் வழியே உற்றுப்பார்த்தார்.

-

ஒரு பெண் கையிலே கூழ்ச்சட்டி வைத்திருந்தாள். அதிலிருந்த கூழை, அளவிட்டுத் தன் மக்கள் ஒவ்வொருவருக்கும் விட்டுக் கொண்டே வந்தாள். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் முந்திக்