புறநானூற்றுக் கதைகள்
161
கிழவர் கால்கள் நிலத்தில் தான் நடந்தன. ஆனால் சிந்தனையோ வானில் பறந்து கொண்டிருந்தது. நடுத்தெரு வழியே சென்றார். அங்கொரு வீட்டில் பத்துப் பதினைந்து பேர்கள் கூடி ஆரவாரமாகக் கூத்தாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் குரல் தெருவையே அலறச் செய்தது. வீட்டுக்காரன் சேந்தன் என்பவன். அவன் ஒலி ஊருக்கே போதும். அவன் நொடி நொடி தோறும் தேதோ ஆணைகளை இட்டுக் கொண்டே இருந்தான். மற்றவர்கள் கைகட்டி, வாய்பொத்தி நின்றனர்.
இவற்றையெல்லாம் கண்ட கிழவர் ஊரை அடுத்து இருந்த வறண்ட ஆற்றுக்குச் சென்றார்.
அதில் நீர் ஓடி நீண்டகாலம் ஆகிவிட்டது. நிழல் தரு வதற்கு ஒரு மரங்கூட இல்லை. பச்சைப் புல் கண்ணில் காண வில்லை. ஏதோவொரு முட் செடியின் நிழலிலே உட்கார்ந்து கொண்டு உலகியலைச் சிந்தித்தார். எத்தனையோ நிகழ்ச்சிகள் படக்காட்சி போன்று வந்து வந்து மறைந்து கொண்டிருந்தன.
66
வறுமை ம கொடிது! அதனினும் கொடிது வறுமை எண்ணம்; வறுமை எண்ணத்தைப் போக்கிவிட்டால் வறுமை தானாகப் போய்விடும். வறுமை எண்ணம் தொலையவேண்டு மாயின் உண்மையறிவு வேண்டும்" என்று அவர் சிந்தனைக்கு இடையே ஒரு கருத்துத் தோன்றியது. “ஆம்! இனி உண்மையறிவு உண்டாக்குவது என் தொண்டு” என்று முடிவுகொண்டார். அவர் எங்கெங்கோ செல்வதாக இருந்தார் ஆறு, குளம், அருவி, மலை, நாடு, நகர், இவற்றைக் காண வேண்டுமன்பது அவர் அவா! திட்டத்தை மாற்றிக் கொண்டார்.” மக்களை மக்களாக வாழச் செய்வதைப் பார்க்கிலும் உயர்ந்த தொண்டு ஒன்றுமே இல்லை" என்பதே அவர் கண்ட தெளிவு ஆயிற்று.
கிழவர் பூங்குன்றம் என்னும் ஊரினர். அவர் பெயர் பூங்குன்றன் என்பதாம். இன்றைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகிபாலன் பட்டியே பண்டைப் பூங்குன்றமாகும்.
பூங்குன்றன் பிறவியிலேயே நல்லறிவு வாய்ந்து விளங்கினார். ளமையிலேயே உயரிய நூல்களைக் கற்று நுண்ணறிவு பெற்றார். செயற்கரிய செய்த பெரியோர்களோடும், அறிவது அறிந்த ஆன்றோர்களோடும் பழகி இயற்கை அறிவை மிகுதியாக்கிக் கொண்டார்.இன்பம் துன்பம், வாழ்வு தாழ்வு இவற்றால் சோர்வு காணாத உள்ளம் அவருக்கு அமைந்துவிட்டது. “தம் கையே தமக்கு உதவி” என்னும் கருத்தால் தம் வயிற்றுப் பாட்டுக்காகவும்,