162
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
பிறர் நல்வாழ்வுக்காகவும் மருத்துவத் தொழிலும் கணியத் தொழிலும் செய்துவந்தார். அதனால் கணியன் என்றும், கணியன் பூங்குன்றன் என்றும் பெயர் பெற்றார்.
பூங்குன்றன் தாம் செய்த தொழிலால் கிடைத்த வருமானத் தைத் திரட்டி வைத்தார் இல்லை. பெரும்பாலும் பொருள் பெறாமல் தொண்டாகவே கருதிச் செய்தார். ஏதோ கிடைத்த வருவாயிலும் தம் வாழ்வுக்குப் போக எஞ்சியதை ஏழையர்க் காகவே பயன்படுத்தினார். இந்நிலையிலே தான் வேறிடங் களுக்குச் சென்று வர விரும்பிப் புறப்பட்டார். தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்டு விட்ட பின்பு அவருக்கு ஊர் ஏது! உறவு ஏது! தம் ஊருக்காகவும், உறவுக்காகவும் மட்டும் வருவது இல்லையே தொண்டு!
கணியன் முதலாவதாகக் கண்ட வீட்டுக்கு வந்தார். வீட்டுக் காரர் பெயர் மருதன்; மனைவி பெயர் நல்லாள். அவர்கள் குழந்தைகள் தெருக்களிலே அலைந்து திரிந்தனர். மருதனும் நல்லாளும் திண்ணையிலே உட்கார்ந்து சோர்ந்து போய் ஒரு 6 வரை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையிலே சிறிதும் இன்பக் களை களை இல்லை. வலுவாகச் சிறிது சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கணியனை வரவேற்றனர். ஓர் ஓலைத் தடுக்குத் தந்து உட்கார வைத்தனர்.
பேச மருதனுக்கு வாய் எழவில்லை. என்ன பேசுவது, எதைப் பேசுவது? மனம் இருக்கிறது, விருந்து செய்ய வேண்டு மென்று! வளம் இருக்கிறதா? அது இல்லாத பொழுதில் அமைதி தானே தக்க மருந்து!
கணியன் பேசத் தொடங்கினார்; “ஏன் மழையே பெய்ய வில்லையா?'
66
ஆமாம் நெடுநாட்களாகப் பெய்யவில்லை”
"வெளியூருக்கும் மக்கள் பிழைப்புக்காகப் போயிருப் பார்களோ? பல வீடுகளில் ஆள்களே இல்லையே!"
66
ஆமாம்! என்ன செய்வார்கள்? வயிற்றைக் கழுவிக் கொள்வதற்காகப் பிறந்த ஊரை விட்டு வெளியேறுவது காடுமையாகத்தான் இருக்கிறது. வழியில்லாதபோது? நாங் களும் முன்பே போயிருப்போம். ஆனால் இந்த மண்ணை விட்டுப் போக மனம் வரவில்லை. இந்த உறுதியும் இன்னும் எவ்வளவு நாள்களுக்குத்தான் நீடிக்குமோ? தெரியவில்லை. நீங்கள் யாரென்று