உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

163

“ஆம்; அதைச் சொல்லிக் கொள்ளவில்லை. என் ஊர் பூங்குன்றம். என் பெயர் பூங்குன்றன். ஊர்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் வந்தேன். எங்கெங்கோ அலைந்து விட்டு வருகின்றேன். ஆனால் என்னை மேலும் ன செல்லாதவாறு தடுத்துவிட்டது இவ்வூர் வறுமை!”

“பாவம்! துன்பம்தான், யார் என்ன செய்துவிட முடியும்?" “என்ன செய்து விடவும் முடியாதுதான், எதுவும் முடியாது என்று எல்லோரும் சும்மா இருந்து விடுவதும் சரியில்லை அல்லவா!”

66

'ஆமாம்! இந்நிலைமையில் யாருக்கு யார் தான் என்ன செய்துவிட முடியும்? ஏதோ ஒன்றிரண்டு பேர்களுக்கு என்ன வறுமை வாட்டினாலும் கவலையில்லை. அவர்களை ஒட்டி வாழும் சிலருக்கு ஒருவாறு கவலையில்லை. மற்றவர்கள் பாடு? இந்த ஊரிலுள்ள நல்லுள்ளம் படைத்த ஒன்றிரண்டு பேரிட மாவது செல்வம் இருந்தால் பயன்படும். அவர்கள் தங்களைத் தாங்கள் காத்துக் கொள்ள முடியாமல் ஊரை விட்டு வெளி யேறிவிட்டனர். எரியும் வீட்டிலே எடுத்தது மீதம் என்று, வறுமைக்குத் துயரப்பட வேண்டாத நிலையை ஏற்படுத்திக் காண்டது ஒன்றிரண்டு பேர்களும் அவர்களை ஒட்டிய வர்களும் திரிகின்றார்கள்." மருதன் பேச்சிலே இடை பொறுமலும், விம்மலும், தயக்கமும் காணப்பட்டன.

தடை

டையே

பூங்குன்றன் தம் கையில் கொண்டுவந்திருந்த சுமையை அவிழ்த்தார். அதில் இருந்த கட்டுச்சோறு, ஏதோ தோ சில பண்டங்கள் ஆகியவற்றை எடுத்து மருதனிடம் கொடுத்தார்.

66

“இருக்கட்டும்; வேண்டாம்; வேண்டாம்” என்று மருதன் வாய் பேசியது.

“எவ்வளவு தொலைவு போகின்றீர்களோ! இருக்கட்டும்' என்று ஒரு தூண் மறைவில் நின்று கொண்டிருந்த நல்லாள் கூறினாள்.

பண்டத்தின் மணத்தால் நெடுந்தொலைவிலிருந்து அறிந்து கொண்டு படையெடுக்கும் எறும்புபோல் வீதியில் திரிந்த சிறுவர்கள் வீட்டுக்கு ஓடி வந்தனர். போட்டிபோட்டுக்கொண்டு அள்ளித் தின்றனர். கணியனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. கவலையும் ல்லாமல் இல்லை.