164
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
நோய்ப் படுக்கையில் கிடந்தவனைப் பார்க்கச் சென்றார் கணியன். அவருக்கு மருத்துவம் செய்யத் தெரியும் அல்லவா! நாடி பிடித்துப் பார்த்தார். காய்ச்சலால் இரத்தவோட்டம் இன்றி, வெளிறிப் போய்க் கிடந்த அவன் உடல் நிலைமையை ஆராய்ந்து பார்த்து மருந்து உதவினார். கஞ்சி போட்டுத் தருவதற்கும் வழியற்றிருந்த அவ்வீட்டார், கணியனுக்கு என்ன தான் கொடுத்துவிடுவார்கள். கணியனே, காசு கொடுத்தார். கஞ்சிபோட்டுக் குடிப்பதற்கு. "இப்படியும் மருத்துவர்கள் இருப்பார்களா?” என்று நினைக்கும்போதே நோயாளனுக்கு நோயும், வீட்டாருக்கு வறுமையும் தீர்ந்தது போல் ஆயிற்று.
பூங்குன்றன் வேறிடம் செல்லும் எண்ணத்தை விட்டு விட்டார் அல்லவா! அதனால் ஆளில்லாத ஒரு வீட்டில் தங்கிக் கொண்டார். குடகூரிலே ஆளில்லாத வீடுகள் தானே நிறைய இருந்தன!
வருவாயை எதிர்பாராமல் தொண்டாற்றிய பூங்குன்றன் இப்பொழுது கணியம் பார்த்தலையும், மருத்துவம் செய் தலையும் வருவாய்க்கான தொழிலாகவே கருதிக்கொண்டு வெளியூர்களில் போய் ஓயாமல் ஒழியாமல் பாடுபட்டார்.
பொருள் தேடுவதற்காக மருத்துவத் தொழிலைக் கற்றவர் அல்லரே கணியன். அதனால் மிகவும் தெளிவாகக் கற்றிருந்தார். நோயைத் தெளிவாக அறிந்து, நோய் தோன்றிய காரணத்தைத் திட்டவட்டமாக அறிந்து, அதைத் தணிப்பதற்குரிய மருந்து வகைகளை நுட்பமாகக் கண்டு செய்யக்கூடிய முறையின்படி செய்து நோயாளரைப்ணிேனார்.அனால் கணியன்பூங்குன்றனைக் கண்டவுடன் நோய்கள் ஓட்டமெடுத்தன. நோயாளர்களும் பூங்குன்றன் தரும் நன் மருந்தாலும், இன் சொல்லாலும் பிணி அகன்று மகிழ்ந்தனர். தவசமும் பயறும் கிழங்கும் கீரையும் சுமை சுமையாகத் தந்தனர். நாள்தோறும் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வருவார் பூங்குன்றன். வந்து சேர்ந்ததும் என்ன கொண்டு வந்தார் என்பதற்குரிய அடையாளமே இல்லாது போய்விடும்.
பூங்குன்றன் ஊரை விட்டுக் கிளம்பியதிலிருந்து குடகூர் மக்கள் அவர் எப்பொழுது வருவார் என்று நோக்கிக் கொண்டே இருப்பர். வந்தவுடன் ஒருவரை முந்திப்போய் ஒருவர் சுமையை வாங்கிக்கொள்வர்; பூங்குன்றன் ஊர் மன்றத்திற்குச் செல்வார். இருக்கும் மக்களைக் கணக்கிட்டுப் பகுத்துத் தருவார். பெற்றதைப் பெரிதும் மகிழ்ந்து வாங்கிக் கொள்வர்.