புறநானூற்றுக் கதைகள்
165
பச்சையாகவே அவ்விடத்திலேயே உண்டு விடுவர் சிலர்; பசி என்னவாயினும் வீட்டாரை நினைத்துக் கொண்டு செல்வர் சிலர்; சிறிது கிடைத்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியால், வேறு பங்கு களைப் பெறாமல் ஓடுவிடுவர் சிலர்.
ப
அரிசியோ, பழமோ கிடைத்தால் பூங்குன்றன் வந்த வர்களிடம் தந்து விடுவது இல்லை. அதை வேறொரு துணியில் முடித்து வைத்துக் கொண்டு கூட்டமெல்லாம் போன பின் தாமே எடுத்துக் கொண்டு தெரு வழியே செல்வார். வீட்டை விட்டு வெளியேற மாட்டாத முதியர், நோயர், நொய்ந்து மெலிந்த சிறுவர் ஆகியவர்களுக்குத் தந்துதவுவார். பகற் பொழுதெல்லாம் வெவ்வேறு ஊர்களிலே அலைந்து திரிந்து வர வேண்டியது ஏற்பட்டமையால், இரவு நெடு நேரம் வரைக்கும் உள்ளூர் நோயாளரைக் கண்டு மருந்து தரவும், அளவளாவவும் செல விட்டார். அவர் எப்பொழுது சாப்பிடுகிறார், உறங்குகிறார் என்பவை மக்கள் அறியக் கூடா தவையாகப் போய்விட்டன. உயர்ந்த அவர் உள்ளம் அமைந்து உண்ணவும் விடவில்லை; உறங்கவும் விடவில்லை. தன்னலமே குறியானவன் அருகில் இருக்கும் வறுமையைப் பற்றி அணுவும் எண்ணாது உண்கின்றான்; அடுத்திருப்போர் அழுகை அவலம் பற்றி எண்ணாது அயர்ந்து உறங்குகின்றான்; அண்டை வீட்டிலே நோய் முணகலும் சாக்காட்டழுகையும் கேட்கும் போதும் குடித்து டுக் களியாட்டம் ஆடுகின்றான்; வெடிச் சிரிப்புடன் உலா வருகின்றான்; அவனிடம் உள்ளம் என்பது உயர்ந்தோரிடம் அது இருக்கிறது! வேற்றுமை இவ்வொன்றே
தான்!
ல்லை;
பயன்படுத்துமாறு
பூங்குன்றன், கீரை வகைகளைப் மக்களைத் தூண்டினார். அருகே இருந்த ஊர்களுக்கும், வயல் களுக்கும் மக்களை அனுப்பி முஞ்ஞைக் கீரை, குப்பைக் கீரை, வேளைக்கீரை, அரைக்கீரை ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு வந்து உணவாகக் கொள்ளச் செய்தார். இது மக்கள் உயிர் து போகாதிருக்கப் பெருந்துணை புரிந்தது.
கணியன் உள்ளூரார்க்குக் கண்கண்ட தெய்வம் ஆனார். காலத்தில் உதவும் உயர் தெய்வம் ஆனார். ஆனால் மக்கள் பாராட்டுக்காகவா இதைச் செய்தார். புகழ்மொழி கருதிச் செய்வார் தொண்டுகள் வாயளவுடன் ஒழியுமே ஒழிய கையளவுக்கு எட்டாது. அதனைப் பெற்ற மக்களும் வாயளவுடன் வாழ்த்துவதோடு சரி! உண்மைத் தொண்டன் தன்னை வாயால்