உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

167

போனது. பூங்குன்றன் எது பற்றியும் அறியார்; அறிந்தாலும் அது பற்றிக் கனவிலும் கவலை கொள்ளார்! பகை அதுபற்றிக் கனவிலும் கவலைகொள்ளார்! பகை பாராட்டிக் கொண்டு வெறுக்கவும் மாட்டார்.

ஒரு நாள் பூங்குன்றன் வீட்டு முற்றத்தில் 10, 15 தவச மூடைகள் கிடந்தன. விடிந்து வெளியே வந்த பூங்குன்றன் வியப்படைந்தார். இவை இங்கெப்படி வந்தன என்று சிந்தித்தார். என்றும் புரியவில்லை.

ஊர் விழிக்கும் பொழுது ஆயிற்று. இரண்டு ஒன்றாக இருந்த சேவற் கோழிகள் ஊக்கமின்றிக் கூவின. அவற்றின் குரல்கள், பசுக்களையும் நாய்களையும் எழுப்பி விட்டன. மக்களும் ஒருபின் ஒருவராய் எழுந்தனர். பூங்குன்றன் வீட்டு பக்கம் வந்த ஒருவன் அங்குள்ள மூடைகளை கண்டு ஊரெல்லாம் சொன்னான். பெட்டி, சட்டி கூடைகளுடன் மக்கள் கூடி விட்டனர். பூங்குன்றன் சொன்னார்; “இந்த மூடைகள் யாருடையவை என்பவை தெரியவில்லை. இவை எப்படி வந்தன என்பதும் விளங்கவில்லை. இவ்வாறு இருக்க நாம் பங்கிட்டுக்கொள்வது தவறாகும்”

மக்களுக்கு ஆவல் பெருகியது. சிலருக்கு பூங்குன்றன் உரைகூட வருத்தத்தை உண்டாக்கியது. அவர் முன் கிடக்கும் தவசத்தை எடுத்துக்கொள்ளத் தடுக்கிறாரே என்பது அவர்கள் எண்ணமாக இருந்தது. பொருள் தான் முதன்மையே ஒழிய, அது எப்படி வருகிறது என்பது முதன்மையிட இல்லை .என்னும் குணத்தில் போய்விட்டார்கள் அவர்கள்! அவர்கள் நிலைமை பூங்குன்றனுக்குப் புரியாததா? “நீங்கள் ஆத்திரப்படும் அளவு அரிக்கும் வறுமை உங்களுக்கு உண்டு. ஆனால், மனிதன் சாவே கிட்டினாலும் கூட முறையான வழியில் வந்ததை அன்றி எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால் அறிவையோ பண்பையோ கொண்டவன் அவன் என்பதற்குத் தான் அடையாளம் என்ன?' என்று ஒருவாறு அமைதிப் படுத்தினார்.

சேந்தனுக்கு - பூங்குன்றன் மீது சிலருக்கு வெறுப்பு ஏற்படு மாறு கிளப்பி விட்டுக் கொண்டிருந்த குழப்பக்காரனுக்கு பூங்குன்றன் வீட்டின் முன் மக்கள் ஒரே கூட்டமாய் இருப்பதும். தவச மூடைகள் கிடப்பதும் தெரிய வந்தன. அங்கே வந்தான். சிறிது நேரம் நின்றான்; மக்களுள் சிலர் அவற்றை எடுத்துச் செல்ல ஆவல் கொண்டிருப்பதையும் பூங்குன்றன் அவ்வப்போது