168
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
அமைதி செய்வதையும் கண்டான். தன் சொற்படியாடும் கூட்டத் தாரைக் கூட்டிக் கொண்டு வந்தான். தாறுமாறாகப் பேசுமாறும், வலிந்து எடுத்துச் செல்லுமாறும் தூண்டிக் கொண்டிருந்தான். வந்தவர்கள் “தகராறு” அன்று வேறு எதுவும் வாழ்க்கையில் கற்றறியாதவர்கள். அவர்களிடம் நல்ல பண்புகள் இல்லாமல் ம் இல்லை. அறிவும் இல்லாமல் இல்லை. தலைவன் கெடுத்து விட்டான். அவனும் தீய வழிகளைக் காட்டிக் காட்டி, அதிலேயே ஊறிப் போகுமாறு செய்து விட்டான். இத்தகையவர்களை நொந்துகொள்ளலாமா? அவர்கள் இயல்புக்குத் தக்கப்படியே நடந்து கொண்டனர்.
வாய் போனபடி பேசினார்கள்; “ஊருக்கு உதவி புரிவ தாகப் பேச்சு! தெருவில் கிடக்கும் தவச எடுத்துக் கொள்ளத் தடை. இதுதான் உதவியோ”?
தெருவிலே கிடக்கும் மூடைகளை எடுக்க இவர் என்ன உரிமையானவர்?”
66
வருக்குத் தடுக்க உரிமை உண்டு என்றால் எங்களுக்கு எடுக்க உரிமை உண்டு”
66
66
-
‘அயலூர்க்காரனுக்கு இடம் தந்து அவனுக்குத் தக்கபடி ஆடும் மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும்” ஏதேதோ பேசினர். பூங்குன்றன் எரிமலைக்கு முன் நின்று காண்டும் குடல் குலுங்கச் சிரிக்கும் இயல்பு படைத்தவர். இந்நிகழ்ச்சியும், என் செயலும் இவர்கள் பேசி மகிழுமாறு இருந்தால் எனக்கு என்ன துன்பம்! நல்லதே “என்று சிரித்துக் கொண்டார். “கெட்டவன்! சிரித்துச் சிரித்துக் கொல்வான். அழுபவனை நம்பலாம். சிரிப்பவனை நம்பினோம், கெட்டோம்” இது சேந்தன் மொழி.
பூங்குன்றன் மேலும் சிரித்தார்.
சேந்தனுக்குப் பொத்துக் கொண்டு வந்தது சீற்றம். தன்னைச் சுட்டெரிப்பது போலாகக் கருதினான். வெறி கொண்டான். தன் ஆட்களை ஏவி எடுத்துச் செல்லுமாறு தூண்டினான். அதுவரை, பூங்குன்றன் சொல்லுக்காக ஓய்ந்து கிடந்த மக்கள் எதிர்த்து எழுந்தனர். ‘பூங்குன்றனை இழிவு படுத்தும் இவர்களை விட்டு வைக்கக் கூடாது” என்று கொதித் தனர். வரிந்து கட்டிக் கொண்டு நின்றனர். நாங்கள் பட்டினி கிடந்து சாவோம்! எல்லோரும் கூடி இன்றைக்கே வேண்டு மானாலும் சாவோம்! இந்த வறுமைக்காக இழிசெயலில்