உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

169

போகமாட்டோம். எங்கள் செல்வத்தைச் சுரண்டிச் சுரண்டிக் கொழுத்துப் போய்த் திரியும் நீங்கள், எங்கள் எதிரிகளே அன்றி உதவி புரிந்து வரும் இவர் எதிரியாக மாட்டார்! எச்சரிக்கை சேந்தா! உன் வீட்டில் 6 எத்தனை எத்தனை மூடைகள், களஞ்சியங்கள் கிடக்கின்றன. அவை யாருடையவை? அவற்றை நாங்கள் இனி விட்டு வைக்கப் போவது இல்லை. வெள்ளம் புறப்பட்டு விட்டது. தலை மேல் போகின்றது. இனிச் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? இந்த மூடையைத் தொடுங்கள்! உங்கள் எலும்புகளைக் கூடையில் தான் அள்ள வேண்டியது வரும். அறிவோடு உங்கள் செயலை நீங்கள் பாருங்கள்” என்று கூறி உரத்துடன் நின்றார்கள்.

தடியர்கள் ஏசினார்கள்; பேசினார்கள். ஆனால் “செயல் கெட்டுவிடும்; ஊரை எதிர்க்க முடியாது” என்னும் எண்ணத் தால் வாலை மடக்கிக்கொண்டு திரும்பினர்.

பூங்குன்றனுக்கு ஊரின் பிளவு நிலைமை வேதனை தந்தது. மக்களை அடக்கி வைக்க முடியவில்லை. எப்படியும் செல்வன் சேந்தன் வீட்டைக் கொள்ளையடித்து அங்குள்ள தவசத்தைச் சூறையாடவேண்டும் என்ற வெறி உண்டாயிற்று. வறுமைக் கொடுமையைப் பார்க்கிலும், இவ்வெறிக் கொடுமை கொடிது. ஆனால் அது மூண்டு கொண்டு எழுகிறது. ஒன்றை ஒன்று விஞ்சிய கொடுமைகளின் இடையே வாழ வேண்டிய நிலைமை மிகக் கொடியது என எண்ணினார் பூங்குன்றன்.

“மக்களே ஒன்று கேளுங்கள்; நான் சொல்லிவிடுகின்றேன். நான் ஏன் இந்த ஊரில் தங்கினேன்? உங்கள் வாழ்வே என் வாழ்வென ஏன் கொண்டேன்? எனக்காகவா? உங்கள் நன்மைக்கு அன்றித் தீமைக்காக ஏதும் சொல்வேனா? செய்வேனா? என்னே நம்புகிறீர்களா? நம்பினால் அமைதி கொள்ளுங்கள்! நமக்கு பகைவர் எவரும் அல்லர். நமக்குப் பகைவரும் நாம்தான்; நண்பரும் நாம்தான்; நாம்தான் பகையையோ, நட்பையோ உண்டாக்கிக்கொள்கிறோம் நல்லதை உண்டாக்குவதும், கெட்டதை உண்டாக்குவதும் நாம்தான். எனின், கெட்டதைத் தேடிப் பிடித்து ஏன் உண்டாக்கிக் கொள்ளவேண்டும்? அது அறிவுடைமை ஆகுமா?”

“சிற்சில வேளைகளில் சிலர் அறிந்தோ, அறியாமலோ தவறாகப் பேசிவிடலாம்; தவறாகச் செய்துவிடலாம். அதற்குப் பதில் தவறு. தவறுக்குத் தவறு.... இப்படியே போய்க் கொண்டு இருந்தால் உலகம் என்னாவது? என்னை நம்பினால் பகை