170
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
யுணர்ச்சியை விடுங்கள். அன்பு நெறியைக் கடைப்பிடியுங்கள். எவ்வூர் ஆனால் என்ன? எவர் ஆனால் என்ன? எல்லோரும் நம்மவர்; நம் அன்பர்; நம் உறவினர்; “யாதும் ஊரே யாவரும் கேளிர்" அன்பினைத் தந்து அந்த அன்பினை மீண்டும் பெறக் கூடாதா? நீங்கள் பகை பட்டு நின்றால் - உறுதியாக - அது என்னால் விளைந்ததுதான். உங்களுக்குப் பணி செய்வதற்காக வந்து, பகை மூட்டி விட்ட குற்றம் என்னைத் தான் சேரும். நான் குற்றம் சாட்டப்படவேண்டியவன்தான் என்றால் உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள்.” என்று கூறினார் கணியன். அவர்
உரையிலே துடிப்பு இருந்தது!
பொங்கி வரும் பாலில் நீர்விட அது அமைந்ததுபோல் மக்கள் பூங்குன்றன் உரை கேட்டு அமைந்தனர். கலைந்து அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். சிறுவர்கள் மட்டும் விளை யாடிக் கொண்டிருந்தனர். சில ஆட்டுக் குட்டிகள் மூடை மேல் ஏறித் தாவிக்கொண்டிருந்தன. ஒன்றிரண்டு பேர் தொலைவில் நின்றுகொண்டு கூர்ந்து மூடைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
பூங்குன்றன் உலாவச் சென்றார். அவரை நன்றாக அறிந் திருந்த இரண்டு மூன்று பேர் வந்தனர். அவர்களோடு அள வளாவிப் பேசினார். காலையில் நடைபெற்ற நிகழ்ச்சி எதுவும் அவர் உரையிலிருந்து வெளிப்படவில்லை. பேசிக் கொண்டே ஊருக்குள் அழைத்து வந்தார். வீட்டுக்குட் சென்று உட் கார்ந்தனர்.
66
ஒருவர்.
66
இந்த மூடைகள்..." என்று தொடங்கினார் வந்தவருள்
வை யாருடையவையோ? யாருக்காகக் கொண்டு வந்தவையோ?” என்றார் கணியன்.
“உங்களுக்காகத்தான்; இல்லாவிடில் உங்கள் வீட்டின் முன் ஏன் கிடக்கிறது?”
66
'நான் இருக்கும் வீட்டின்முன் கிடந்தால் எனக்குரியது
தானா?”
“பிறகென்ன! அப்படித்தான்’
“என்னுடையதல்லாதவற்றை எடுத்துக் கொள்ள எனக்கு
உரிமை ஏது?”