உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

173

தாழ்ந்து தொங்கும் தாடி” என்று கேலி செய்தான். சேந்தன் சிரித்தான். தெரு வழியே வந்த ஒருவர் சிறுவனைக் கண்டித் தார். “இப்படியா கேலி செய்வது? வேறு யாருமாக இருந்தால் என்ன நடக்கும்?” என்று கொதிப்புடன் கூறினார்.

66

'குழந்தை தானே! அவனுக்கு என்ன தெரியும். என் தாடியைப் பார்த்து அவனுக்கு ஒரு மகிழ்ச்சி! அவ்வளவுதான். இதிலென்ன தவறு” என்று கூறிக் கொண்டு நடந்தார். பூங்குன்றன்.

சினம் கொள்வார் பூங்குன்றன் என்பது சேந்தன் எண்ணம். அப்படிச் செய்தால் அதைக் கொண்டு வம்புக்கு இழுக்க வாய்ப்பு ஏற்படும் என்பது அவன் உள்ளாசை தோண்டு பவரையும் தாங்கிக் கொள்ளும் நிலம் போன்ற பொறுமை யுடைய பூங்குன்றன் பொறுமை இழப்பாரா?

கேலி செய்த சிறுவனுக்குப் பூங்குன்றன் பேச்சு வியப்பாக இருந்தது. “நல்ல மனிதர்! இவரைக் கேலி செய்தது தவறு” என்று அவன் வாய் பேசியது. சிரித்து நின்ற சேந்தனுக்குச் சிறுவன் செயல் சினத்தை உண்டாக்கியது. பின் உண்டாகாதா? தன்னைப் போன்ற குணம் மகனுக்கு இல்லையல்லவா!

பூங்குன்றன்

இருந்த வீட்டில் ஒரு நாள் தீப்பற்றிக் கொண்டது. அதனை ஊர்க்காரர் கண்டு விட்டனர். வெளித் திண்ணையில் படுத்திருந்த பூங்குன்றன் எழுந்து விட்டார். மக்கள் ஓடியாடி வேலை பார்த்தனர். விரைவில் தீயை அணைக்க முயன்றனர். சுடர் விட்டெழுந்த கொடுவாய் நெருப்பும், ஊர் மக்களால் அணைக்கப்பட்டது. வீடு வேவது பற்றி எத்தகைய கவலையும் அற்றுப்போய் உற்று நோக்கிக் கொண்டு இருந்தார் கணியன். வாழ்வு அழியும் போது, ஏற்படும் ‘சுடர்’ என்று வியந்தார். மலருக்கு ‘உதிர்கிறேனே' என்ற கவலையுண்டா? கவலையற்று எரிந்து விழும் கூரையும் இத்தகையதே என்று எண்ணினார். 'வெறி நெருப்பாகிறது; அன்பு தண்ணீராகிறது. அன்புத் தண்ணீர் பாய்ச்சியவுடனே வெறி நெருப்பு அணைந்து விட்டது. ஆனால் வெறி நெருப்பைத் தொலைக்க வெறி நெருப்பே மூட்டினால் ஊரே பாழ்பட்டு இருக்கும்!” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

66

"இன்பம்! இன்பம்! இனித்துன்பம் இல்லை! வெற்றுச் சுவரில் கூரை இருந்தது. இனி அது இல்லை; இயற்கை தரும் மர நிழல்! ஆம்! இயற்கை வீடு என்வீடு!! எழில் வீடு என்வீடு!" என்று மகிழ்ந்தார். ஒரு மரத்தின் அடியில் போய் அமைதியாக