174
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
உட்கார்ந்து நிகழ்ச்சிகளைக் கவனித்தார். மக்களுக்குக் கிளர்ச்சி வலுத்தது. என்னென்னவோ செய்ய வேண்டும் போல் தோன்றி யது! பொறுத்துக்கொண்டனர் பூங்குன்றனுக்காக!
மறுநாள்
சேந்தனும், அவனைச் சேர்ந்த சிலரும் பூங்குன்றன் வீட்டின் வழியே வந்தனர். எரிந்த வீட்டைக் கண்டு பெருஞ்சிரிப்புச் சிரித்தனர்! அவர்கள் ஏவி விட்ட தீப்படை கொண்ட வெற்றிக் காட்சி யல்லவா! பூங்குன்றனை மர நிழலில் கண்டு எக்களித்தனர். பூங்குன்றனுக்கோ புன்முறுவல் வந்தது.
66
ஒருவன் சொன்னான் “இவ்வளவு நடந்தும் சிரிக்கிறான்! கொடியவன்! உடம்பெல்லாம் நஞ்சு!” ஆமாம் கெட்டவன், ஊரை நம்ப வைத்து, நம் பேரைக் கெடுத்து விட்டான். இவனை ஒழித்தால்தான் நிம்மதி”. இப்படி ஒருவன் கூறினான். எல் லோருமா இரும்புக் காதினர்? தோற்காதுள்ளவர்கள் யாரேனும் இருக்க மாட்டார்களா? இது அவர்கள் சிலருக்குக் கேட்டது. து ஊரெல்லாம் பேச்சாயிற்று. அதற்கு உலைமூடி உண்டா?
சேந்தன் வீட்டிலே பழித் திட்டம் உருவாகியது. எப்படியும் பூங்குன்றனை உருட்டி விட வேண்டும்; இன்றேல் வெருட்டி விட வேண்டும். இதுவே திட்டம். வெறியர்கள் சேந்தனுக்குத் துணை நின்றனர். அவர்கள் வழக்கத்திற்கு மேல் மதுவகைகளைச் சேந்தன் தந்தான். பணங் காசுகளையும் எடுத்து வீசினான். பூங்குன்றனுக்குக் கேடு செய்தால் அன்றி அவ்வூரில் தன் புகழை நிலை நாட்ட முடியாது. மக்களும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்னும் அளவுக்கு உறுதி கொண்டு விட்டான் சேந்தன். இனி எதுவும் செய்ய மாட்டானா?
சேந்தன் திட்டங்களை யெல்லாம் அவன் மகன் அறிந்து கொண்டான். அவன் சிறுவன் தான். இருந்தாலும் வீட்டில் நடக்கும் பேச்சினைப் புரிந்து கொள்ள முடியாமல் போக வில்லை. பூங்குன்றனை அடிப்பதற்காகப் போட்டிருக்கும் திட்டம் அவனுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. தான் அறிந்த அளவில் எப்படியும் தடுத்து விட வேண்டும் என்று எண்ணி னான். அதனால் சேந்தனுக்கும் வெறியர்களுக்கும் தெரியாமல் வீட்டினின்று வெளியேறினான். பூங்குன்றன் வழக்கம்போல் வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். அவரைச் சிறுவன் தொடர்ந்தான்.
'ஐயா' என்றான் சிறுவன்.
வ