உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

175

குரல் கேட்டுத் திரும்பினார் பூங்குன்றன். “என்னப்பா? இப்படித் தன்னந்தனியாய்!”

66

‘ஒரு செய்தி! உங்கள் மேல் என் தந்தையாருக்கும் வேறு சிலருக்கும் வெறுப்புப்போல் இருக்கிறது. அதனால் உங்களை எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எப் பொழுதும் வீட்டில் உங்கள் பேச்சாகவே இருக்கிறது. உங்களை அடித்து ஊரை விட்டு ஓட்டி விடவேண்டும் என்று இன்று கூடிப்பேசி இருக்கிறார்கள். ‘என்ன நடக்குமோ' என்று. எனக்குப் பயமாக இருக்கிறது. நீங்கள் எப்படியாவது தப்பித்துக் கொள்ளவேண்டும். எங்கள் அப்பா கொடியவர்; முரட்டுத் தனமாகப் பேசுவார்; எதையும் செய்வார்” பையன் தொடர்ந்து பேசினான்.

றுவனது முதுகைத் தடவிக் கொடுத்தார் கணியன். மகிழ்ச்சியோடு கூறினார்; “நீ கவலைப் படாதே! எனக்கு ஒன்றும் வராது! என்னை ஏன் அவர்கள் அடிக்கப் போகிறார்கள். நான் ஒன்றும் அவர்களுக்குக் கெடுதல் செய்யவில்லையே! பிறகு எனக்கு என்ன கவலை? உனது நல்லெண்ணத்திற்கு வாழ்த்து” என்றார்.

“நான் சொல்வது உண்மை; பொய்யில்லை எங்கப்பா மாதிரி தான் நான் இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் கெட்ட எண்ணத்தோடு சொல்லவில்லை” என்றான் சிறுவன்.

“நீ கெட்ட எண்ணத்துடன் சொல்கிறாய் என்று நினைக்க வில்லை. அப்படி யாரையும் நினைக்கமாட்டேன். நீ போய் வா! வருவதைத் தடுக்க எவராலும் முடியாது” என்றார் கணியன். சிறுவன் வருத்தத்துடன் நடந்து ஊரையடைந்தான்.

பூங்குன்றன் வேற்றூர்களுக்குப் போய் விட்டு மாலைப் பொழுதில் திரும்பினார். ஆனால் அதற்குள் ஊரே கலகலத்துப் போய் இருந்தது. பூங்குன்றனை அடிக்கத் திட்டமிட்ட செய்தி யின் விளைவுதான் அது. “பூங்குன்றன் மேல் துரும்பு பட்டால் சேந்தன் மேல் இரும்பு படாமல் தீராது” என்று பேசிக் கொண்டனர். பொறுமை வேண்டியதுதான். ஆனால் பொறாமைக் காரர்களிடம் பொறுமை காட்டவே கூடாது” என்று சொல்லவும் தொடங்கி விட்டனர். அவ்வளவு வேதனை ஏற்பட்டு விட்டது மக்களுக்கு!

66

ஊருக்கு வந்தும் வராதிருக்கும் பொழுதே செய்திகளை அறிந்தார் பூங்குன்றன். கடுகடுப்புக் காட்டினார் இல்லை. சிறிது