புறநானூற்றுக் கதைகள்
சு
3
வாரத்தில் வரகும் தினையும். பெருகிக் கிடக்கும். இவ்வளவும் குறைவில்லாமல் கிடைத்தலால் உணவுப் பஞ்சம் இல்லை. விண்மீன்களின் பெருக்கம் போலாக மலையில் சுனைகள் பெருகி இருப்பதால் நீருக்குக் குறைவு இல்லை. நல்லதொரு வேந்தன் நயமிக்க ஆட்சியில் இருப்பதால் நெஞ்சத்துக்கும் குறைவு இல்லை. நன்மக்கள் நிறையக் கொண்ட நாடு ஆண்ட வேந்தன் பாரிக்கும் அல்லல் இல்லை; அனைவரும் இனிது வாழ்ந்தனர்.
இத்தகைய நிலையிலே ஒருநாள் நாடு வளங்கண்டு வரச் சென்ற காவலன் முல்லைக் கொடி காற்றில் அசைவதைக் கண்டு மனம் பொறானாகித் தான் ஏறிவந்த தேரையே கொடி படரு வதற்காக விட்டு விட்டு நடந்து வந்தான். அவன் அருஞ் செயலைக் கண்ட புலவர் பெருமக்களும், பொதுமக்களும், புகழ்ந்து சிறப்பித்தனர். பாரி கொடைத் தன்மையால் “தேர்வண் பாரி”யாகவும், “வள்ளல் பாரி”யாகவும் உயர்ந்துவிட்டான்.
ன்
பாரி கொடைச் சிறப்பால் பெரும் புகழ் பெற்று விட்டான் இல்லையா! இது சேர, சோழ பாண்டியராகிய வேந்தர் களுக்கும், பிடிக்கவில்லை. கொடையால் வெல்லஇயலாது, ஆகையால் படையாலேனும் வெல்லுமாறு கருதினர். அதுவும் பாரியைப் பொறுத்த அளவில் எளிமையானது அல்ல என்பதை யும் அறிவர். எனினும் மூவரும் ஒன்றுபட்டுத் தாக்கினால் பெற்றுவிடலாம் வெற்றி என்ற முடிவுக்கு வந்தனர்.
திடுமெனப் போர் தொடங்குவது எப்படி? காரணம் வேண்டாமா? முறைமை வேண்டாமா? இதற்காக மூவேந்தரும் பாரிக்கு ஓலை யொன்று எழுதி அனுப்பினார். அவ்வோலையைக் கண்ணுற்றதும் கண்கள் ‘கனற்பொறி போலச் சிவப்பேறின. விலாவெடிக்கச் பாரி சிரித்தான். 'என்னே அறியாமை! என் மக்களை நான் மூவேந்தருக்கும் திருமணம் செய்து தர வேண்டு மாம்! இல்லையேல் களத்திலே சந்திக்க நேரிடுமாம்! அழகு! அழகு! பெண் கேட்கும் முறையே தனி அழகு! வேந்தர் மூவர்! மகளிரோ இருவர்! பெண் வேண்டுமாம் பெண்! என்ன அறிவு கொண்டு இக்கேள்வி கேட்கத் துணிந்தார்கள்? சிந்தனை என்ன அவர்களிடம் செத்துத் தொலைந்துவிட்டதா? என்று கொதிப்புடன் ‘மடமட’ வென்று பேசினான்.” களத்திலே சந்திக் கட்டும்! அவர்கள் போராண்மையையும் நம் போராண்மை யையும் அங்கே காண்போம்” என்று ஓலை கொண்டு வந்தவனை அனுப்பி வைத்தான்.