உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம்

5

மூவேந்தரும் பறம்பு மலையை முற்றுகையிட்டனர். மலைக் கோட்டைக்குள்ளிருந்து எவரும் வெளியேறவோ, வெளியே இருந்து உள்ளே புகவோ முடியாதவாறு தடுத்தனர். நெடுநாட் களாக இவ்வாறே முற்றுகையைத் தடுக்காமலும், நேரடியாகப் போரில் இறங்காதும் இருந்தனர் பறம்புமலை தான்பெ ல வருவாய் உடையதாயிற்றே! வேந்தர் முற்றுகையால் எத்தகைய இடையூறுக்கும் ஆட்படவில்லை. மேலும் பாரியின் உயிர் நண்பரும் புலவருமான கபிலர் பறம்பு மலையில் இருந்தார். அவர் கிளிகளை நன்கு பழக்கப்படுத்தி வைத்து, செந்நெற் கதிர்களைக் கொய்துவருமாறு செய்தார். கிளிகள் கணக்கின்றிக் கதிர்களைக் கொய்து கொண்டு வந்து குவித்தன. அதனால் பறம்பு மக்கள் எத்தகைய இன்னலுமின்றி இருந்தனர்.

தராது. அல்லவா!

எனினும் இத்தகைய நிலைமை ஒரு நாட்டுக்கு நன்மை ஆதலால் அருட்புலவரான கபிலர் மூவேந்தரையும் நெருங்கினார். "வேந்தர்களே! இம்முற்றுகை யாலோ, களப்போராலோ பாரியை நீங்கள் வென்றுவிட முடியாது. நீங்கள் அவனை வெல்ல வேண்டுமானால் அதற்குரிய வழிவகைகளைத் தேடி அலைய வேண்டாம். நானே சொல் கின்றேன். பாரிக்கு முன்னூறு ஊர்களும், இம்மலையும் உண்டு. முன்னமே, ஆடுவாரும், பாடுவோரும் முன்னூறு ஊர்களையும் பரிசிலாகப் பெற்றுக் கொண்டுவிட்டனர். இம்மலை ஒன்றே எஞ்சியுள்ளது. நீங்கள் மூவரும் பாடும் பாணராகி, உங்கள் உரிமை மனைவியர் ஆடும் விறலியராகி வந்தால் இம் மலையை எளிதில் பெறுவீர்கள். இவ்வாறு கையேந்திப் பெறுவது இல்லாமல் வாளேந்திப் பெற இயலாது” என்றார்.

மூவேந்தரும் கபிலர் உரையைப் பன்முறை எண்ணிப் பார்த்தனர். அவர் சொல்லுவது அனைத்தும் உண்மை என்னும் முடிவுக்கும் வந்தனர். அந்தோ! முற்றுகையைவிட்டுப் போய் விடுவர் என்ற எண்ணத்துடன் கபிலர் உரைத்த உரையையே பாரியை வெல்லத் தக்க - இல்லை -கொல்லத் தக்க வஞ்சக வழிக்குப் பயன்படுத்திக் கொண்டுவிட்டனர்.

மூவரும் இரவலர் போல் வந்து பாரி முன் நின்றனர். "கொடை வேண்டிவந்த கலைஞர்களே! இடையற உதவுவேன்; யாதுவேண்டும்! என்று கேட்டான் வள்ளல் பாரி. இக்கேள்வி வந்தும் வராமலும் இருக்கும்பொழுதே படைக்கருவி எதுவுமற்று நின்ற வள்ளலை வளைத்துக்கொண்டு வஞ்சத்தால் கொன்று விட்டனர். முல்லைக்கொடி அசைவதைக் கண்டு பொறுக்க